Asianet News TamilAsianet News Tamil

டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-விற்கு ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த மல்யுத்த வீராங்கனை திவ்யா கக்ரான்..!

டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ சௌரப் பரத்வாஜுக்கு, காமன்வெல்த்தில் வெண்கலம் வென்ற மல்யுத்த வீராங்கனை திவ்யா கக்ரான் ஆதாரத்துடன் பதிலடி கொடுத்தார்.
 

wrestler divya kakran retaliation to aam aadmi party mla with proof of that she represented delhi
Author
Delhi, First Published Aug 9, 2022, 5:53 PM IST

பர்மிங்காமில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி மற்றும் 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் முடித்தது.

இந்திய வீரர், வீராங்கனைகள் குறிப்பாக பளுதூக்குதல், மல்யுத்தம், பாக்ஸிங், பேட்மிண்டன் ஆகிய போட்டிகளில் சிறப்பாக விளையாடி பதக்கங்களை குவித்தனர்.

மல்யுத்தத்தில் இந்திய வீரர், வீராங்கனைகள் வெற்றி பெற்றதற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வாழ்த்து கூறியிருந்தார். ஆனால் 2018ல் வேண்டுகோள் விடுத்தும், மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு டெல்லி அரசு எந்த வசதியும் செய்து கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை பகிரங்கமாக டெல்லி முதல்வரிடம் நேரடியாக வைத்தார் திவ்யா கக்ரான்.

அரவிந்த் கேஜ்ரிவால் பதிவிட்ட வாழ்த்து செய்தியில், காமன்வெல்த்தில் இந்திய மல்யுத்த வீரர்கள் அசத்திவிட்டனர். ஒரே நாளில் 3 தங்கம் உட்பட 6 பதக்கங்களை வென்றுள்ளனர். சாக்‌ஷி மாலிக், தீபக் புனியா, திவ்யா கக்ரான் ஆகியோருக்கு வாழ்த்துகள் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பதிவிட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்திருந்த திவ்யா கக்ரான், இப்போது நீங்கள்(கேஜ்ரிவால்) வாழ்த்து கூறியது மகிழ்ச்சிதான். ஆனால் மல்யுத்த வீரர்களுக்கு பயிற்சி எடுக்கக்கூட டெல்லி அரசு எந்தவித உதவியும் செய்து தந்ததில்லை. நான் 20 ஆண்டுகளாக டெல்லியில் வசித்துவருகிறேன். மல்யுத்த பயிற்சி பெறும் எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும், இன்றுவரை எனக்கு டெல்லி அரசு எந்த உதவியும் செய்து தந்ததில்லை என்று அரவிந்த் கேஜ்ரிவாலின் மூக்கை உடைக்கும் விதமாக- திவ்யா கக்ரான் பதிலடி கொடுத்திருந்தார்.

ஒரு விளையாட்டு வீராங்கனையின் ஆதங்கத்தை நியாயமான முறையில் தார்மீக ரீதியில் அணுகாமல், சிறுபுத்தியுடன் அணுகியிருக்கிறார் டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ சௌரப் பரத்வாஜ். ஆங்கில இணையதளத்தில் வெளியான செய்தியின் சிறு குறிப்பை பகிர்ந்து, திவ்யா கக்ரான் உத்தர பிரதேசத்திற்காக விளையாடிய வீராங்கனை. அவர் டெல்லிக்காக விளையாடவில்லை. நாட்டிற்கு  பதக்கம் வென்று பெருமை சேர்த்ததற்கு வாழ்த்துகள் என்று பதிவிட்டிருந்தார்.

தான் டெல்லியை சாராதவர் என்ற ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏவின் கருத்துக்கு, தான் டெல்லிக்காக ஆடிய சான்றிதழ் ஆதாரத்துடன் பதிலடி கொடுத்து, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ மூக்கை உடைத்துள்ளார் திவ்யா கக்ரான்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios