Asianet News TamilAsianet News Tamil

உலக ஹாக்கி லீக்: இந்தியாவும், அர்ஜென்டீனாவும் இன்று அரையிறுதியில் மோதல்...

World Hockey League India and Argentina are in the semifinals today
World Hockey League India and Argentina are in the semifinals today
Author
First Published Dec 8, 2017, 10:27 AM IST


உலக ஹாக்கி லீக் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவும், அர்ஜென்டீனாவும் இன்று மோதுகின்றன.

உலக ஹாக்கி லீக் போட்டியின் புதன்கிழமை நடைபெற்ற காலிறுதியில் பெல்ஜியத்தை வீழ்த்தியது இந்தியா.

நேற்று நடைபெற்ற மற்றொரு காலிறுதியில் 3-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது அர்ஜென்டீனா.

இதனையடுத்து அரையிறுதியில் இந்த இரண்டு அணகளும் மோதுகின்றன.

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அர்ஜென்டீனா தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி தொடர்ச்சியாக இரு கோல்கள் அடித்தது. ஆட்டத்தின் 21-வது நிமிடத்தில் அந்த அணியின் லுகாஸ் வில்லா, ஃபீல்டு கோல் ஒன்றை அடித்து அணிக்கு முன்னிலை தந்தார்.

அர்ஜென்டீனாவின் மட்டியாஸ் பாரெடெஸ் 29-வது நிமிடத்தில் கோலடித்து, தனது அணியை 2-0 என முன்னிலைப்படுத்தினார்.

இந்த நிலையில், அர்ஜென்டீனாவுக்கு பதிலடியாக அதே நிமிடத்தில் இங்கிலாந்து தனது கோல் கணக்கை தொடங்கியது. அந்த அணியின் டேவிட் கான்டன் அணிக்கான முதல் கோலை அடித்தார்.

இவ்வாறாக முதல்பாதி ஆட்டம் முடிவுக்கு வர, அதில் அர்ஜென்டீனா 2-1 என முன்னிலை வகித்தது.  பின்னர் தொடங்கிய 2-வது பாதியிலும் அர்ஜென்டீனாவின் கையே ஓங்கியிருந்தது. 34-வது நிமிடத்தில் அந்த அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை, அதன் வீரர் ஜுவான் கிலார்டி கோலாக மாற்றினார். இதனால் அர்ஜென்டீனா3-1 என்ற நிலையை எட்டியது.

ஏறத்தாழ அர்ஜென்டீனாவின் வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில், ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் இங்கிலாந்தின் ஆடம் டிக்ஸன் ஃபீல்டு கோல் ஒன்றை அடிக்க, இங்கிலாந்து கோல் எண்ணிக்கை இரண்டானது.

இறுதியில் அர்ஜென்டீனா 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றியை பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

Follow Us:
Download App:
  • android
  • ios