World Hockey League Climax Olympic Champion Argentina defeated Argentina to ...
உலக வலைகோல் பந்தாட்டம் லீக் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கோல் கணக்கில் ஒலிம்பிக் சாம்பியனான அர்ஜென்டீனாவை வீழ்த்தி வாகைச் சூடியது.
உலக வலைகோல் பந்தாட்டம் லீக் போட்டியின் இறுதி ஆட்டம் ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்தில் நடைபெற்றது. நேற்று இரவு நடைபெற்ற இதில் ஆஸ்திரேலியா, ஒலிம்பிக் சாம்பியனான அர்ஜென்டீனாவை எதிர்கொண்டது.
இந்த ஆட்டத்தின் முதல் கால்மணி நேரம் வரையில் இரு அணிகளுக்குமே கோல் வாய்ப்பு கிடைக்காத நிலையில், ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் ஜெரிமி ஹேவார்ட் கோல் கணக்கை தொடங்கினார்.
அதற்கு பதிலடியாக 18-வது நிமிடத்திலேயே அர்ஜென்டீனா வீரர் அகஸ்டின் புகாலோ ஒரு கோல் அடித்து, ஆட்டத்தை சமன் செய்தார். இதனால் முதல் பாதி ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கிலேயே முடிந்தது.
பின்னர் நடைபெற்ற 2-வது ஆட்டத்தின் 58-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றது. அந்த அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை தவறாமல் கோலாக்கினார் ஆஸ்திரேலியாவின் பிளேக் கோவர்ஸ்.
எஞ்சிய நேரத்தில் அர்ஜென்டீனா கோல் அடிக்காததால் இறுதியில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கோல் கணக்கில் வென்று வாகைச் சூடியது.
