ஷபாலி வர்மாவின் ஆல்ரவுண்டர் ஆட்டத்தால் சில்ஹெட்டில் இன்று நடந்த மகளிர் ஆசியக் கோப்பை டி20போட்டியில் வங்கதேச அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது இந்திய அணி.

ஷபாலி வர்மாவின் ஆல்ரவுண்டர் ஆட்டத்தால் சில்ஹெட்டில் இன்று நடந்த மகளிர் ஆசியக் கோப்பை டி20போட்டியில் வங்கதேச அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது இந்திய அணி.

முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சேர்த்தது. 160 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள் சேர்த்து 59 ரன்களில் தோல்வி அடைந்தது.

மெஸ்ஸி , ரொனால்டோ நிச்சயமா இல்லை! உலகிலேயே அதிகமாக ஊதியம் பெறும் கால்பந்துவீரர் யார் தெரியுமா?

இந்த வெற்றி மூலம் இந்திய மகளிர் அணி 5போட்டிகளில் 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.

பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் ஜொலித்த ஷபாலி வர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. பேட்டிங்கில் வெளுத்து வாங்கிய ஷபாலி 44 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 2 சிக்ஸர்கள், 5 பவுண்டர்கள் அடங்கும். பந்துவீச்சலும் 4 ஓவர்கள் வீசி 10 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

மகளிர் ஆசிய கோப்பை: பாகிஸ்தானிடம் தோற்றது இந்தியா

ஷபாலிக்கு உறுதுணையாக ஆடிய கேப்டன் ஸ்மிருதி மந்தனா 47 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 96 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். ஜெமியா ரோட்ரிக்ஸ் 35 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

வங்கதேச அணி பேட்டிங்கில் சொதப்பியது. தொடக்க வீராங்கனைகளும், ஒன்டவுனில் இறங்கிய வீராங்கனை மட்டுமே ஓரளவு ஸ்கோர் செய்தனர். மற்ற பேட்ஸ்மேன் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர்.

தொடக்க வீராங்கனை பர்ஹானா ஹோக்(30), முக்சிதா கதூன்(21), நிகர் சுல்தானா(36) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். முதல் விக்கெட்டுக்கு 45 ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்சமாகும். அடுத்த 6 விக்கெட்டுகள் அடுத்த 55 ரன்களுக்குள் இழந்தது வங்கதேச அணி. நடுவரிசை பேட்ஸ்மேன்களும், கடைசி வரிசை வீராங்கனைகளும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.

மகளிர் ஆசிய கோப்பை: தீப்தி, பூஜா அபார பவுலிங்.. இந்தியாவிற்கு எளிய இலக்கை நிர்ணயித்த பாகிஸ்தான்

அருமையாகப் பந்துவீசிய இந்திய வீராங்கனைகள் தொடக்கத்தில் ரன்னைக் கட்டுப்படுத்த சிரமப்பட்டனர். ஆனால் முதல்விக்கெட் வீழ்த்தியபின் வங்கதேச பேட்டிங் ஆட்டம் கண்டது. இதை இறுக்கமாகப் பிடித்த இந்திய பந்துவீச்சாளர்கள் அடுத்தடுத்து நெருக்கடி அளித்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தி வங்கதேசத்தை திக்குமுக்காட வைத்தனர். இதனால் ரன் அடிக்க முடியாமல் வங்கதேச பேட்ஸ்மேன்கள் சிரமப்பட்டனர். 

இந்தியத் தரப்பில் தீப்தி சர்மா, ஷபாலி வர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.ராணா, ரேனு சிங் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.