Asianet News TamilAsianet News Tamil

மகளிர் ஆசிய கோப்பை: தீப்தி, பூஜா அபார பவுலிங்.. இந்தியாவிற்கு எளிய இலக்கை நிர்ணயித்த பாகிஸ்தான்

மகளிர் ஆசிய கோப்பையில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் மகளிர் அணி 20 ஓவரில் 137 ரன்கள் அடித்து 138 ரன்கள் என்ற எளிய இலக்கை இந்தியாவிற்கு நிர்ணயித்துள்ளது.
 

womens asia cup pakistan set easy target to india
Author
First Published Oct 7, 2022, 2:50 PM IST

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் நடந்துவருகிறது. இந்திய மகளிர் அணி முதல் 3 போட்டிகளில் இலங்கை, மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகளை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற நிலையில், இன்று சில்ஹெட்டில் பாகிஸ்தானை எதிர்கொண்டு ஆடிவருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடியது. 

இந்திய மகளிர் அணி:

ஸ்மிரிதி மந்தனா, சபினேனி மேகனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), தயாளன் ஹேமலதா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), தீப்தி ஷர்மா, பூஜா வஸ்ட்ராகர், ராதா யாதவ், ரேணுகா சிங், ராஜேஷ்வரி கெய்க்வாட்.

இதையும் படிங்க - IND vs SA: அபாரமான அரைசதம் அடித்து கடைசிவரை கடுமையாக போராடிய சஞ்சு சாம்சன்..! முதல் ODI-யில் இந்தியா தோல்வி

பாகிஸ்தான் மகளிர் அணி:

முனீபா அலி (விக்கெட் கீப்பர்), சிட்ரா அமீன், பிஸ்மா மரூஃப் (கேப்டன்), ஒமைமா சொஹைல், நிதா தர், ஆலியா ரியாஸ், ஆய்ஷா நசீம், சதியா இக்பால், துபா ஹசன், ஐமன் அன்வர், நஷ்ரா சந்து.

முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் மகளிர் அணியில் தொடக்க வீராங்கனைகள் இருவரும் சோபிக்கவில்லை. 3ம் வரிசையில் இறங்கிய கேப்டன் மரூஃப் 32 ரன்கள் அடித்தார். ஒமைமா ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானார். பொறுப்புடனும் அதேவேளையில் அதிரடியாகவும் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்த நிதா தர், 37 பந்தில் 56 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 137 ரன்கள் மட்டுமே அடித்த பாகிஸ்தான் அணி, 138 ரன்கள் என்ற எளிய இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்துள்ளது.

இதையும் படிங்க - மீண்டும் ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக களமிறங்கும் டிவில்லியர்ஸ்..! ரசிகர்கள் செம குஷி

இந்திய அணி சார்பில் அனைவருமே அபாரமாக பந்துவீசினர். ஆனாலும், தீப்தி ஷர்மா மற்றும் பூஜா வஸ்ட்ராகர் சற்று கூடுதல் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினர். தீப்தி 3 விக்கெட்டுகளையும், பூஜா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios