மீண்டும் ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக களமிறங்கும் டிவில்லியர்ஸ்..! ரசிகர்கள் செம குஷி
அடுத்த ஐபிஎல் சீசனில் கண்டிப்பாக ஆர்சிபி அணியில் இருப்பேன் என்று டிவில்லியர்ஸ் உறுதியளித்ததையடுத்து, ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.
ஐபிஎல்லில் ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத ஆர்சிபி அணி, ஒவ்வொரு சீசனிலும் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கி ஏமாற்றத்துடன் வெளியேறுவதே இதுவரை வழக்கமாக உள்ளது. ஆர்சிபி அணியில் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் என்ற 2 மிகப்பெரிய வீரர்கள் இணைந்து ஆடியும் ஆர்சிபிக்கு கோப்பை கைகூடவில்லை.
2011ம் ஆண்டிலிருந்து 2021ம் ஆண்டு வரை 11 சீசன்கள் ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக ஆடிய டிவில்லியர்ஸ், அந்த அணிக்காக 156 போட்டிகளில் ஆடி 4491 ரன்களை குவித்துள்ளார். கடந்த ஆண்டு ஐபிஎல்லுக்கு முன் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு அறிவித்தார் டிவில்லியர்ஸ். டிவில்லியர்ஸ் இல்லாத ஆர்சிபி அணி ரசிகர்களுக்கு வருத்தமும் ஏமாற்றமும் அளிக்கிறது.
இதையும் படிங்க - IND vs SA: 3வது டி20 டாஸ் ரிப்போர்ட்.. இந்திய அணியில் 3 அதிரடி மாற்றங்கள்
டிவில்லியர்ஸின் வாணவேடிக்கையை காண்பதற்காகவே ரசிகர்கள் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் திரள்வார்கள். கடந்த 2 சீசன்களாக ஐபிஎல் கொரோனா காரணமாக அமீரகத்தில் நடத்தப்பட்டது. அடுத்த சீசன் இந்தியாவில் நடக்கிறது. டிவில்லியர்ஸ் இனி ஆடமாட்டார் என்பதால் ஆர்சிபி ரசிகர்கள் அவரை மிஸ் செய்வார்கள்.
ஆனால் ஏதோ ஒரு வகையில் ஆர்சிபி அணியில் டிவில்லியர்ஸ் அங்கம் வகிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், அதை உறுதி செய்துள்ளார் டிவில்லியர்ஸ்.
வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்து ஓய்வில் இருக்கும் டிவில்லியர்ஸ், ஐபிஎல் குறித்து பேசும்போது, அடுத்த ஆண்டு ஆர்சிபி அணியில் கண்டிப்பாக இருப்பேன். ஆர்சிபி அணியை நான் மிஸ் செய்கிறேன். எந்தவிதத்தில் ஆர்சிபி அணியில் இருப்பேன் என்று தெரியாது. ஆனால் எனது இரண்டாவது வீடான சின்னசாமி ஸ்டேடியத்தில் அடுத்த ஆண்டு கண்டிப்பாக இருப்பேன். அதற்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன் என்று டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.
இதையும் படிங்க - டி20 கிரிக்கெட்டின் டாப் 5 வீரர்கள்.. ஆடம் கில்கிறிஸ்ட்டின் அதிரடி தேர்வு..! நம்பர் 1 இடத்தில் இந்திய வீரர்
டிவில்லியர்ஸ் ஒரு பிளேயராக ஆடாவிட்டாலும், பயிற்சியாளர் குழுவில் ஒரு முக்கியமான பொறுப்பில் கண்டிப்பாக ஆர்சிபி அணியில் இருப்பார் என்பது உறுதியாகியுள்ளது. மீண்டும் டிவில்லியர்ஸை ஆர்சிபி அனியில் காணும் ஆர்வத்திலும் உற்சாகத்திலும் குஷியிலும் உள்ளனர் ஆர்சிபி ரசிகர்கள்.