விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் டெய்லரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் ரஃபேல் நடால். ஆனால் காயம் காரணமாக அரையிறுதியில் அவர் ஆடுவது சந்தேகமாகியுள்ளது. 

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் லண்டனில் நடந்துவருகிறது. காலிறுதி சுற்றில், சமகாலத்தின் தலைசிறந்த டென்னிஸ் வீரரான ரஃபேல் நடாலும் அமெரிக்காவின் டெய்லர் ஃப்ரிட்ஸும் மோதினர். 

இதையும் படிங்க - ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை: டாப் 10-ஐ விட்டு வெளியேறிய கோலி..! ரிஷப், பேர்ஸ்டோ அபரிமிதமான வளர்ச்சி

22 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று, அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற டென்னிஸ் வீரர் என்ற சாதனைக்குரிய ரஃபேல், வயிற்றில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் சிறப்பாக விளையாடமுடியாமல் கஷ்டப்பட்டார். சிகிச்சை பெற்றுவிட்டு விளையாட வந்த ரஃபேல் நடால் கடுமையாக போராடி டெய்லரை வீழ்த்தி வென்றார்.

நான்கரை மணி நேரம் நடந்த இந்த போட்டியில் கடுமையாக போராடிய ரஃபேல் நடால், 3-6, 7-5, 3-6, 7-6 மற்றும் 7-6 என்ற செட் கணக்கில் டெய்லர் ஃப்ரிட்ஸை வீழ்த்தி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

இதையும் படிங்க - ENG vs IND: முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்! ஒரு இடத்திற்கு 3 வீரர்கள் போட்டா போட்டி

ரஃபேல் நடால் - கிர்ஜியோஸ் மற்றும் ஜோகோவிச் - நாரி ஆகியோர் அரையிறுதியில் மோதுகின்றனர்.

நாளை அரையிறுதி போட்டி நடக்கவுள்ள நிலையில், ரஃபேல் நடாலுக்கு வயிற்றில் காயம் ஏற்பட்டதால், தான் ஆடுவது சந்தேகம் என்று நடால் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் காயத்திலிருந்து முழுமையாக மீண்டு அரையிறுதியில் ஆட வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.