MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • Sai Sudharsan: இது என்ன கொடுமை! மீண்டும் 'ஹிட் விக்கெட்'! மோசமான சாதனை படைத்த சாய் சுதர்சன்!

Sai Sudharsan: இது என்ன கொடுமை! மீண்டும் 'ஹிட் விக்கெட்'! மோசமான சாதனை படைத்த சாய் சுதர்சன்!

Sai Sudharsan: ஐபிஎல் 2026 குவாலிஃபையர் 2 போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் வீரர் சாய் சுதர்சன் மீண்டும் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்து மோசமான சாதனை படைத்துள்ளார். 

1 Min read
Author : Rayar A
Published : May 29 2026, 11:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
சாய் சுதர்சன் மீண்டும் ஹிட் விக்கெட்
Image Credit : x

சாய் சுதர்சன் மீண்டும் ஹிட் விக்கெட்

ஐபிஎல் 2026 தொடரில் குவாலிஃபையர் 2 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வரும் நிலையில், குஜராத் டைட்டன்ஸ் வீரர் சாய் சுதர்சன் இந்த போட்டியிலும் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்துள்ளார். அதாவது ராஜஸ்தான் பவுலர் பிரிஜேஷ் சர்மா வீசிய பந்தை சாய் சுதர்சன் பவுண்டரிக்கு விரட்ட முயன்றார். பந்து பவுண்டரி கோட்டை நோக்கிச் சென்ற அதே வினாடியில், அவரது கையில் இருந்து நழுவி எதிர்பாராதவிதமாக ஸ்டம்பில் பட்டு பெய்ல்ஸ் கீழே விழுந்தது.

விசித்தரமான மோசமான சாதனை

சாய் சுதர்சன் வெறும் 32 பந்துகளில் 8 பவுண்டரிகள், 1 சிக்சருடன் 58 ரன்கள் குவித்து மிரட்டலாக விளையாடிக் கொண்டிருந்த நிலையில் அவர் துரதிருஷ்டவசமாக அவுட்டாகியுள்ளார். ஏற்கெனவே ஆர்சிபிக்கு எதிரான குவாலிஃபையர் 1 போட்டியிலும் சாய் சுதர்சன் இதேபோல் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் அடுத்தடுத்த போட்டிகளில் ஹிட் விக்கெட் ஆன முதல் வீரர் என்ற விசித்தரமான மோசமான சாதனையை சாய் சுதர்சன் பெற்றுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
ரசிகர்கள் அதிர்ச்சி
Image Credit : X/IPL

ரசிகர்கள் அதிர்ச்சி

ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் 9 பந்துகளில் 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சாய் சுதர்சன் இப்படி ஒரு விசித்திரமான முறையில் விக்கெட்டை பறிகொடுத்தது ஒட்டுமொத்த மைதானத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கிரிக்கெட் ரசிகர்கள் சிலர் சாய் சுதர்சன் அவுட் இல்லை. நடுவர் தவறாக அவுட் கொடுத்து விட்டதாக தெரிவித்தனர். சாய் சுதர்சன் அவுட்டா? இல்லையா? என சமூக வலைத்தளங்களில் பெரிய விவாதமே நடந்தது.

33
கிரிக்கெட் விதி என்ன?
Image Credit : ANI

கிரிக்கெட் விதி என்ன?

ஆனால் கிரிக்கெட் விதி 35-ன் படி பார்த்தால் சாய் சுதர்சன் அவுட் தான். அதாவது ஒரு பேட்ஸ்மேன் பந்தை அடிக்கும் முயற்சியில் இருக்கும் போதோ அல்லது ரன் ஓடத் தொடங்கும் போதோ, அவரது உடலோ, ஆடையோ அல்லது கையில் இருக்கும் பேட்டோ ஸ்டம்பைத் தாக்கினால் அது 'ஹிட் விக்கெட்' ஆகும். அதன்படி, சாய் சுதர்சன் அடித்த பந்து பவுண்டரி லைனைத் தொட்டாலும், அவர் அவுட் என்றே நடுவர்களால் அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஐபிஎல்
குஜராத் டைட்டன்ஸ்
ராஜஸ்தான் ராயல்ஸ்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Virat Kohli: சாதனைக்காக விளையாடினால் என்ன நடக்கும் தெரியுமா? மனம் திறந்த 'கிங்' கோலி!
Recommended image2
Virat Kohli Records: கிங் கோலியின் ருத்ரதாண்டவம்.. ஒரே செஞ்சரியில் பல ரெக்கார்டுகள் காலி!
Recommended image3
IND vs WI 1st ODI: கோலி, கில் அதிரடி சதம்... வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
Related Stories
Recommended image1
Sai Sudharsan: சிஎஸ்கேவை கதற விட்ட தமிழன்! விராட் கோலி சாதனையை சமன் செய்த சாய் சுதர்சன்!
Recommended image2
Sai Sudharsan: சாய் சுதர்சன் விசித்திர ஹிட் விக்கெட்! அவுட்டா? இல்லையா? கிரிக்கெட் விதி சொல்வது என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved