MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • Sai Sudharsan: சிஎஸ்கேவை கதற விட்ட தமிழன்! விராட் கோலி சாதனையை சமன் செய்த சாய் சுதர்சன்!

Sai Sudharsan: சிஎஸ்கேவை கதற விட்ட தமிழன்! விராட் கோலி சாதனையை சமன் செய்த சாய் சுதர்சன்!

Sai Sudharsan: ஐபிஎல் 2026 வாழ்வா சாவா போட்டியில் சிஎஸ்கே குஜராத் அணிக்கு எதிராக படுதோல்வியை சந்தித்து தொடரில் இருந்து வெளியேறியது. தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் சிஎஸ்கே பவுலிங்கை சிதறடித்து புது சாதனை ஒன்று படைத்துள்ளார்.

2 Min read
Author : Rayar A
Published : May 21 2026, 11:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
சிஎஸ்கே படுதோல்வி
Image Credit : ANI

சிஎஸ்கே படுதோல்வி

ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் வாய்ப்பைத் தக்கவைக்க வேண்டிய வாழ்வா-சாவா போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் சிஎஸ்கே படுதோல்வி அடைந்து, பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்லாமலேயே தொடரிலிருந்து வெளியேறியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிக்ன் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்தது. 

சாய் சுதர்சன், கேப்டன் சுப்மன் கில் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோரின் அரைசதம் அடித்தனர். சாய் சுதர்சன் 53 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார். சுப்மன் கில் 37 பந்துகளில் 64 ரன்கள் அடித்தார். ஜோஸ் பட்லர் 27 பந்துகளில் 57 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பின்பு 230 ரன்கள் என்ற இமாலய இலக்கைத் துரத்திய சிஎஸ்கே 13.4 ஓவர்களில் 140 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 89 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி படுதோல்வியைச் சந்தித்தது. சஞ்சு சாம்சன் கோல்டன் டக் ஆகி அதிர்ச்சி அளித்தார். ஷிவம் துபே 17 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து டாப் ஸ்கோரராக இருந்தார். மேத்யூ ஷார்ட் 14 பந்துகளில் 24 ரன்களும், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 7 பந்துகளில் 16 ரன்களும், அன்ஷுல் கம்போஜ் 8 பந்துகளில் 19 ரன்களும் எடுத்தனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
முகமது சிராஜ் ஆட்டநாயகன்
Image Credit : PTI

முகமது சிராஜ் ஆட்டநாயகன்

குஜராத் தரப்பில் முகமது சிராஜ், ககிசோ ரபாடா, ரஷித் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்தத் தோல்வியின் மூலம், 14 போட்டிகளில் 6 வெற்றி, 8 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தைப் பிடித்த சென்னை அணி, இந்த சீசனை முடித்துக் கொண்டது. அதே வேளையில் 18 புள்ளிகளுடன் குஜராத் அணி முதல் குவாலிஃபையர் போட்டிக்கு மிக அருகில் உள்ளது. ஐபிஎல் வரலாற்றில் ரன்கள் அடிப்படையில் சென்னை அணி சந்திக்கும் மிகப்பெரிய தோல்வி இதுவாகும்.

33
சாய் சுதர்சன் சாதனை
Image Credit : ANI

சாய் சுதர்சன் சாதனை

இந்த போட்டியில் அசத்திய குஜராத் வீரர் தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் நடப்பு ஐபிஎல் தொடரில் 600க்கும் அதிகமான ரன்கள் அடித்துள்ளார். அடுத்தடுத்து இரண்டு சீசன்களில் 600-க்கும் அதிகமான ரன்களை அடித்து சாதனை படைத்துள்ளார். இதன் மூலம், கிறிஸ் கெய்ல், டேவிட் வார்னர், கே.எல். ராகுல் மற்றும் விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் மட்டுமே இருந்த பிரத்யேக பட்டியலில் சாய் சுதர்சனும் இணைந்துள்ளார். 

அதுமட்டுமல்லாமல், மற்றொரு முக்கிய IPL சாதனையையும் அவர் சமன் செய்துள்ளார். ஒரே சீசனில் தொடர்ச்சியாக ஐந்து முறை 50-க்கும் அதிகமான ரன்களை அடித்த நான்காவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதற்கு முன்பு வீரேந்திர சேவாக், ஜோஸ் பட்லர் மற்றும் வார்னர் ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஐபிஎல்
குஜராத் டைட்டன்ஸ்
சிஎஸ்கே
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs WI 5th T20: பெங்களூருவில் கொட்டித் தீர்த்த மழை.. இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் தொடர் 2-2 என சமன்!
Recommended image2
டாஸ் வென்றும் இந்தியாவுக்கு பேரிடி! ஹோப்பின் சதம், சாம்சனின் போராட்டம்... தோல்விக்கான 3 காரணங்கள்!
Recommended image3
டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் வெள்ளை டிரஸ் ஏன்? இந்த சுவாரஸ்யமான வரலாறு தெரியுமா?
Related Stories
Recommended image1
IPL 2026: CSK vs SRH: இம்பேக்ட் பிளேயராக தோனி? மேட்ச் வின்னர் கம்பேக்! சிஎஸ்கே பிளேயிங் லெவன்!
Recommended image2
36 பந்துகளில் சதம் விளாசிய மும்பை வீரரை தட்டித்தூக்கும் சிஎஸ்கே.. அஸ்வின் பாராட்டிய ஆயுஷ் வர்தக் யார்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved