MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • 36 பந்துகளில் சதம் விளாசிய மும்பை வீரரை தட்டித்தூக்கும் சிஎஸ்கே.. அஸ்வின் பாராட்டிய ஆயுஷ் வர்தக் யார்?

36 பந்துகளில் சதம் விளாசிய மும்பை வீரரை தட்டித்தூக்கும் சிஎஸ்கே.. அஸ்வின் பாராட்டிய ஆயுஷ் வர்தக் யார்?

குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் மோசமான தோல்வியைத் தழுவிய சிஎஸ்கே, தனது அடுத்த போட்டியில் பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் (MI) அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது.

2 Min read
Author : Rayar A
Published : Apr 28 2026, 04:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
சிஎஸ்கே அழைப்பு விடுத்த ஆயுஷ் வர்தக்
Image Credit : x

சிஎஸ்கே அழைப்பு விடுத்த ஆயுஷ் வர்தக்

ஐபிஎல் 2026 கிரிக்கெட் திருவிழா களைகட்டியுள்ள நிலையில், 5 முறை சாம்பியனான சிஎஸ்கே அணியின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே 3 வெற்றி மட்டுமே பெற்று 5 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. அந்த அணியின் அதிரடி வீரர் ஆயுஷ் மாத்ரே காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறி விட்டார். இதனால் சிஎஸ்கே தனது பேட்டிங் வரிசையை பலப்படுத்த அதிரடி மாற்றங்களைச் செய்து வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
36 பந்துகளில் சதம் விளாசினார்
Image Credit : ANI

36 பந்துகளில் சதம் விளாசினார்

அந்த வகையில், மும்பையைச் சேர்ந்த 21 வயதான இளம் ஆல்-ரவுண்டர் ஆயுஷ் வர்தக் (Ayush Vartak) தற்போது சிஎஸ்கே அணியின் பயிற்சி ஆட்டங்களில் (Trials) பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளார். ஆயுஷ் மாத்ரே போல் ஆயுஷ் வர்தக்கும் மிகச்சிறந்த அதிரடி வீரர். இவர் 2020-ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் ஜூனியர் அணிக்காக விளையாடிய போது, காங்கா லீக் தொடரில் வெறும் 36 பந்துகளில் சதம் விளாசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். 2025-ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான 23 வயதுக்குட்பட்டோருக்கான (Under-23) ஒருநாள் தொடரில், 6 இன்னிங்ஸ்களில் 363 ரன்கள் குவித்தார். இதில் 26 சிக்ஸர்கள் அடங்கும்.

சிறந்த 23 வயதுக்குட்பட்ட வீரர்

மும்பை கிரிக்கெட் சங்கத்தின் (MCA) 2024-ஆம் ஆண்டிற்கான 'சிறந்த 23 வயதுக்குட்பட்ட வீரர்' விருதையும் ஆயுஷ் வர்தக் வென்றுள்ளார். இவர் வெறும் அதிரடிக்காக மட்டுமின்றி மன உறுதிக்கும் பெயர் பெற்றவர். ஒருமுறை காலில் ரத்தம் சொட்டச் சொட்ட அவர் பேட்டிங் செய்தது அவரது அர்ப்பணிப்பைக் காட்டியது. ஆயுஷ் வர்தக்குக்கு சிஎஸ்கே அழைப்பு விடுத்ததற்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார்.

33
அஸ்வின் பாராட்டு
Image Credit : Facebook/Chennai Super Kings

அஸ்வின் பாராட்டு

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அஸ்வின், ''ஏலத்தில் விற்கப்படாத போதிலும், திறமையான வீரர்களைத் தேடிப் பிடிப்பதில் சிஎஸ்கே எப்போதும் கில்லாடி என்பதை இது நிரூபிக்கிறது'' என்று அவர் கூறியுள்ளார். ஆயுஷ் மாத்ரே தொடக்க வீரராக அறியப்பட்டாலும், வர்தக் மிடில் ஆர்டரில் வந்து ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர். குஜராத் அணிக்கு எதிரான தோல்விக்குப் பிறகு, சிஎஸ்கேவுக்கு இவரைப் போன்ற ஒரு "Impact Player" தேவைப்படுகிறது.

மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே மோதல்

ஆயுஷ் வர்தக் ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளின் சோதனைகளிலும் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை சிஎஸ்கே அணியில் இவர் இடம் பெற்றால், அது அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய திருப்பமாக அமையும். 

குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் மோசமான தோல்வியைத் தழுவிய சிஎஸ்கே, தனது அடுத்த போட்டியில் பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் (MI) அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது. இந்த போட்டியிலும் மும்பையை வீழ்த்தி சிஎஸ்கே வெற்றிப் பாதைக்கு திரும்புமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
சிஎஸ்கே
ஐபிஎல்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs WI 1st ODI: கோலி, கில் அதிரடி சதம்... வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
Recommended image2
Virat Kohli: 15,000 ரன்களை தொட்ட ‘கிங்’ கோலி.. மிரட்டல் சாதனை படைத்த ரன் மெஷின்..!
Recommended image3
Virat Kohli: 'இந்த குணம் என்னை விட்டு எப்போதும் போகாது'.. வெளிப்படையாக போட்டு உடைத்த விராட் கோலி!
Related Stories
Recommended image1
MS Dhoni: தோனி எப்போது வருவார்? சிஎஸ்கே கொடுத்த 'சூப்பர்' அப்டேட்.. ரசிகர்கள் ஹேப்பி!
Recommended image2
தோனியை ஓவர்டேக் செய்து சஞ்சு சாம்சன் புதிய சாதனை.. சிஎஸ்கே தோற்றாலும் ரசிகர்களுக்கு ஆறுதல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved