MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • MS Dhoni: தோனி எப்போது வருவார்? சிஎஸ்கே கொடுத்த 'சூப்பர்' அப்டேட்.. ரசிகர்கள் ஹேப்பி!

MS Dhoni: தோனி எப்போது வருவார்? சிஎஸ்கே கொடுத்த 'சூப்பர்' அப்டேட்.. ரசிகர்கள் ஹேப்பி!

MS Dhoni Return Update: காயத்தில் இருந்து குணமடைந்து பயிற்சியை தொடங்கியுள்ள தோனி, எப்போது கம்பேக் கொடுப்பார்? என்பது குறித்து சிஸ்கே சூப்பர் அப்டேட் கொடுத்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம். 

2 Min read
Author : Rayar r
Published : Apr 19 2026, 06:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
 சிஎஸ்கேவின் நிலைமை பரிதாபம்
Image Credit : Getty

சிஎஸ்கேவின் நிலைமை பரிதாபம்

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடர் கோலாகலமாக நடந்து வரும் நிலையில், 5 முறை சாம்பியனான சிஸ்கே அணியின் நிலைமை பரிதாபமாக உள்ளது. இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே 2 வெற்றி மட்டுமே பெற்று 4 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. நேற்று கூட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறும் நிலையில் இருந்து சிஸ்கே தோல்வியை தழுவியது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

ஒரு போட்டியில் கூட விளையாடாத தோனி

அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக கால் தசைப்பிடிப்பு காரணமாக காயத்திலிருந்து மீண்டு வரும் தோனி, ஐபிஎல் 2026 தொடரில் இன்னும் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. அவர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டாலும், CSK-யின் பிளேயிங் 11-க்கு எப்போது திரும்புவார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்த நிலையில், தோனியின் காயம் நல்லபடியாக குணமாகி வருவதாகவும், ஒரு பேட்டிங் கோச்சாக அவரது பேட்டிங்கில் தனக்கு திருப்தி இருப்பதாகவும் சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி தெரிவித்துள்ளார்.

24
தோனி பிட்னஸுடன் உள்ளாரா?
Image Credit : our own

தோனி பிட்னஸுடன் உள்ளாரா?

இது தொடர்பாக பேசிய அவர், ''காயத்திலிருந்து மீண்டு வருவதற்கான சிகிச்சைகளில் அவர் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறார். ஒரு பேட்டிங் கோச்சாக, அவர் பேட்டிங் செய்யும் விதத்தில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். பயிற்சியில் நீங்கள் பார்த்தது போல, அவர் நன்றாக பேட்டிங் செய்கிறார். அவரது பேட்டிங் குறித்து அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். இப்போது அவரது முக்கிய கவனம், ரன்னிங் ஃபிட்னஸை மேம்படுத்துவதில்தான் உள்ளது.

Related Articles

Related image1
தோனி தான் இன்ஸ்பிரேஷன்.. KKR-ஐ கதறவிட்ட LSG-யின் இளம் அசுரன்.. யார் இந்த முகுல் செளத்ரி?
Related image2
IPL: களமிறங்காமலேயே விடைபெறும் 'தல' தோனி? அதிர்ச்சியில் உறைந்த சிஎஸ்கே ரசிகர்கள்!
34
தோனி எப்போது கம்பேக்?
Image Credit : Getty

தோனி எப்போது கம்பேக்?

ஏனென்றால், போட்டியின் கடைசி கட்டங்களில் பேட்டிங் செய்யும்போது, விக்கெட்டுகளுக்கு இடையில் வேகமாக ஓடி இரண்டு ரன்கள் எடுக்க வேண்டியிருக்கும். அந்த வேகத்தை அவர் மீண்டும் பெற வேண்டும். அவர் எப்போது விளையாடுவார் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அனைத்து ரசிகர்களைப் போலவே நானும் அவர் விரைவில் திரும்புவார் என்று நம்புகிறேன்'' என்று தெரிவித்தார்.

44
கையில் இருந்த மேட்ச்சை விட்ட சிஎஸ்கே
Image Credit : X@IPL

கையில் இருந்த மேட்ச்சை விட்ட சிஎஸ்கே

நேற்று SRH மற்றும் CSK அணிகளுக்கு இடையேயான போட்டியைப் பொறுத்தவரை, மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் சிஸ்கேவை வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த SRH, 194/9 ரன்கள் குவித்தது. அபிஷேக் ஷர்மா (22 பந்துகளில் 59 ரன்கள்) மற்றும் ஹென்ரிச் கிளாசென் (39 பந்துகளில் 59 ரன்கள்) ஆகியோரின் அதிரடி அரைசதங்கள் இதற்கு முக்கிய காரணம்.

CSK பந்துவீச்சில் ஜேமி ஓவர்டன் (3/37), அன்ஷுல் கம்போஜ் (3/22), மற்றும் முகேஷ் சவுத்ரி (2/21) ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு, SRH அணியை 200 ரன்களைத் தாண்டவிடாமல் கட்டுப்படுத்தினர்.

பதிலுக்கு, 195 ரன்கள் இலக்கை துரத்திய CSK அணியில் ஆயுஷ் மத்ரே (13 பந்துகளில் 30), மேத்யூ ஷார்ட் (30 பந்துகளில் 34), மற்றும் சர்ஃபராஸ் கான் (16 பந்துகளில் 25) ஆகியோர் அதிரடியாக ரன் சேர்த்தனர்.

இருப்பினும், SRH பந்துவீச்சாளர்களான ஈஷான் மலிங்கா (3/29) மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி (2/31) ஆகியோர் மிடில் மற்றும் டெத் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி CSK-வின் வேகத்தைக் கட்டுப்படுத்தினர். இதனால், CSK அணி தோல்வியடைந்தது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
எம். எஸ். தோனி
சிஎஸ்கே
எம். எஸ். தோனி சி.எஸ்.கே
ஐபிஎல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
CSK Replacement: ஆயுஷ் மத்ரேக்கு பதில் யார்? CSK-வின் நம்பர் 3 இடத்துக்கு 3 மாஸ் வீரர்கள்!
Recommended image2
"அவரை டிஸ்டர்ப் பண்ணாதீங்க!" – வைபவ்வுக்காக சங்கக்காரா போட்ட ‘தடை’ உத்தரவு!
Recommended image3
காதலிக்காக மும்பை இந்தியன்ஸ் அணி பஸ்ஸை காக்க வைத்த ஹர்திக் பாண்ட்யா? விளாசும் ரசிகர்கள்.. நடந்தது என்ன?
Related Stories
Recommended image1
தோனி தான் இன்ஸ்பிரேஷன்.. KKR-ஐ கதறவிட்ட LSG-யின் இளம் அசுரன்.. யார் இந்த முகுல் செளத்ரி?
Recommended image2
IPL: களமிறங்காமலேயே விடைபெறும் 'தல' தோனி? அதிர்ச்சியில் உறைந்த சிஎஸ்கே ரசிகர்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved