MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • தோனியை ஓவர்டேக் செய்து சஞ்சு சாம்சன் புதிய சாதனை.. சிஎஸ்கே தோற்றாலும் ரசிகர்களுக்கு ஆறுதல்!

தோனியை ஓவர்டேக் செய்து சஞ்சு சாம்சன் புதிய சாதனை.. சிஎஸ்கே தோற்றாலும் ரசிகர்களுக்கு ஆறுதல்!

2026 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரரும் சஞ்சு சாம்சன்தான். அவர் 50.66 சராசரியுடன், 169.83 ஸ்டிரைக் ரேட்டில் 304 ரன்கள் எடுத்துள்ளார். 

2 Min read
Author : Rayar A
Published : Apr 26 2026, 08:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
சிஎஸ்கே தோல்வி
Image Credit : X

சிஎஸ்கே தோல்வி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் 60 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 74 ரன்கள் அடித்தார். குஜராத் டைட்டன்ஸ் தரப்பில், ககிசோ ரபாடா 4 ஓவர்களில் 25 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

முகமது சிராஜ் 4 ஓவர்களில் 23 ரன்களுக்கு 1 விக்கெட் எடுத்து சிறப்பாகப் பந்துவீசினார். மனவ் சுதார் (1/22) மற்றும் ஜேசன் ஹோல்டர் (4 ஓவர்களில் 0/22) ஆகியோரும் ரன் ரேட்டைக் கட்டுப்படுத்தினர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
சஞ்சு சாம்சன் சாதனை
Image Credit : ANI

சஞ்சு சாம்சன் சாதனை

பின்பு பேட்டிங் செய்த குஜாரத் அணி 16.4 ஓவர்களில் 2 விக்கெட் மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. தமிழகத்தை சேர்ந்த தொடக்க வீரர் சாய் சுதர்சன் 46 பந்துகளில் 7 சிக்சர்கள், 4 பவுண்டரியுடன் 87 ரன்கள் அடித்து அசத்தினார். கேப்டன் சுப்மன் கில் 33 ரன்களும், ஜோஸ் பட்லர் 39 ரன்களும் எடுத்தனர். 3 விக்கெட் சாய்த்த கசிசோ ரபாடா ஆட்டநாயகன் விருது வென்றார்.

இந்த போட்டியில் சிஎஸ்கே தோற்றிருந்தாலும் அந்த அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன், ஐபிஎல் தொடரில் ஒரு புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளார். அதாவது ஐபிஎல் தொடரில் 5000 ரன்களை கடந்த 10வது வீரர் என்ற எலைட் கிளப்பில் அவர் இணைந்துள்ளார். போட்டியின் இரண்டாவது ஓவரில், ககிசோ ரபாடாவின் பந்துவீச்சில் ஒரு ஃபோர் அடித்து, சாம்சன் இந்த சாதனையை நிறைவு செய்தார்.

Related Articles

Related image1
மும்பையை கதற விட்ட சஞ்சு சாம்சன்.. மிரட்டல் சதம்.. சிஎஸ்கேவுக்காக புதிய சாதனை படைத்த சேட்டன்!
Related image2
கீர்த்தி சுரேஷை ஓவர்டேக் செய்த சேட்டன்.. கேரளாவின் இன்ஸ்டா 'கிங்' ஆன சஞ்சு சாம்சன்!
33
தோனியை முந்திய சஞ்சு சாம்சன்
Image Credit : ANI

தோனியை முந்திய சஞ்சு சாம்சன்

இப்போது சஞ்சு சாம்சன் 180 இன்னிங்ஸ்களில் 31.69 சராசரியுடன், 140.59 ஸ்டிரைக் ரேட்டில் 5008 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 5 சதங்களும் 26 அரை சதங்களும் அடங்கும். ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய மூன்று அணிகளுக்காக விளையாடி, தனது 185வது போட்டியில இந்த சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் குறைந்த பந்துகளில் 5000 ரன்களை எட்டிய வீரர்கள் பட்டியல்ல மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளார். ஏபி டி வில்லியர்ஸ் 3,288 பந்துகளில் இந்த சாதனையை எட்டி முதல் இடத்தில் உள்ளார். டேவிட் வார்னர் 3,554 பந்துகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். தற்போது சஞ்சு சாம்சன், சுரேஷ் ரெய்னா (3,620 பந்துகள்), கே.எல். ராகுல் (3,688 பந்துகள்), மற்றும் எம்.எஸ். தோனி (3,691 பந்துகள்) ஆகியோரை முந்தி இந்த எலைட் பட்டியலில் இணைந்துள்ளார்.

2026 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரரும் சஞ்சு சாம்சன்தான். அவர் 50.66 சராசரியுடன், 169.83 ஸ்டிரைக் ரேட்டில் 304 ரன்கள் எடுத்துள்ளார். இதில் இரண்டு அபாரமான சதங்களும் அடங்கும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
சஞ்சு சாம்சன்
ஐபிஎல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rohit Sharma: ரிட்டையர்மென்ட் வதந்திக்கு பேட்டால் பதிலடி! லார்ட்ஸில் வரலாற்று சதம் அடித்த ஹிட்மேன்!
Recommended image2
IND vs ENG: ரோஹித் சதம் அடித்தும் இந்தியா தோல்வி... லார்ட்ஸில் கோட்டைவிட்ட 5 இடங்கள்..
Recommended image3
IND vs ENG: இந்திய பவுலர்கள் சொதப்பல்! இங்கிலாந்து மெகா ஸ்கோர்... என்ன காரணம்a?
Related Stories
Recommended image1
மும்பையை கதற விட்ட சஞ்சு சாம்சன்.. மிரட்டல் சதம்.. சிஎஸ்கேவுக்காக புதிய சாதனை படைத்த சேட்டன்!
Recommended image2
கீர்த்தி சுரேஷை ஓவர்டேக் செய்த சேட்டன்.. கேரளாவின் இன்ஸ்டா 'கிங்' ஆன சஞ்சு சாம்சன்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved