MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • கீர்த்தி சுரேஷை ஓவர்டேக் செய்த சேட்டன்.. கேரளாவின் இன்ஸ்டா 'கிங்' ஆன சஞ்சு சாம்சன்!

கீர்த்தி சுரேஷை ஓவர்டேக் செய்த சேட்டன்.. கேரளாவின் இன்ஸ்டா 'கிங்' ஆன சஞ்சு சாம்சன்!

கேரள இளம் புயல் சஞ்சு சாம்சன், நடிகை கீர்த்தி சுரேஷை முந்தி இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்களைக் கொண்ட கேரள பிரபலம் என்ற சாதனையை படைத்துள்ளார்.

2 Min read
Author : Rayar r
Published : Apr 14 2026, 07:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கீர்த்தி சுரேஷை ஓவர்டேக் செய்த சஞ்சு சாம்சன்
Image Credit : stockPhoto

கீர்த்தி சுரேஷை ஓவர்டேக் செய்த சஞ்சு சாம்சன்

இந்திய கிரிக்கெட் வீரரும், சிஎஸ்கே அணி வீரருமான சஞ்சு சாம்சன், நடிகை கீர்த்தி சுரேஷை முந்தி இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்களைக் கொண்ட கேரள பிரபலம் என்ற சாதனையை படைத்துள்ளார். அதாவது சஞ்சு சாம்சன் 19.1 மில்லியன் ஃபாலோயர்களுடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். முதலிடத்தில் இருந்த கீர்த்தி சுரேஷ் 18.8 மில்லியன் ஃபாலோயர்களுடன் 2வது இடம் சென்றுள்ளார்.

சஞ்சு சாம்சன் சாதனை

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். சினிமாவுக்கு வந்த கொஞ்ச காலத்திலேயே தனக்கென ஒரு பெரிய இடத்தை பிடித்தார். சில மாதங்களுக்கு முன்பு வரை, இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்களைக் கொண்ட மலையாள பிரபலங்கள் லிஸ்டில் கீர்த்தி சுரேஷ்தான் நம்பர் 1 இடத்தில் இருந்தார். துல்கர் சல்மான், கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் போன்ற பலரையும் பின்னுக்குத் தள்ளி இந்த சாதனையை அவர் தக்க வைத்திருந்தார்.

24
ஒரே மாதத்தில் மாறிய காட்சிகள்
Image Credit : Getty

ஒரே மாதத்தில் மாறிய காட்சிகள்

ஆனால், ஒரே மாதத்தில் மொத்த காட்சியும் மாறியிருக்கிறது. கீர்த்தி சுரேஷை முந்தி, சஞ்சு சாம்சன் நம்பர் 1 இடத்துக்கு வந்திருக்கிறார். மார்ச் 6-ஆம் தேதி நிலவரப்படி, சஞ்சு இந்த லிஸ்டில் நான்காவது இடத்தில்தான் இருந்தார். ஆனால் இப்போது, 19.1 மில்லியன் ஃபாலோயர்களுடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு, சஞ்சு சாம்சனின் ஃபாலோயர்கள் எண்ணிக்கை கிடுகிடுவென ஏறியிருப்பதாகக் கூறப்படுகிறது.

துல்கர் சல்மான் 4வது இடம்

இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்ட கீர்த்தி சுரேஷுக்கு இப்போது 18.8 மில்லியன் ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். கீர்த்தி இரண்டாவது இடத்துக்கு வந்ததால், முன்பு மூன்றாவது இடத்தில் இருந்த நடிகர் துல்கர் சல்மான் இப்போது நான்காவது இடத்துக்குப் பின்தங்கியுள்ளார். நடிகை அனுபமா பரமேஸ்வரன்தான் தற்போது 16.6 மில்லியன் ஃபாலோயர்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். துல்கர் சல்மானுக்கு 15.9 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர்.

இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்களைக் கொண்ட கேரளத்தவர்கள்:

சஞ்சு சாம்சன் - 19.1 மில்லியன்

கீர்த்தி சுரேஷ் - 18.8 மில்லியன்

அனுபமா பரமேஸ்வரன் - 16.6 மில்லியன்

துல்கர் சல்மான் - 15.9 மில்லியன்

Related Articles

Related image1
Sanju Samson: பேட்டிங்கில் மட்டுமல்ல; கல்லா கட்டுவதிலும் 'சேட்டன்' கில்லாடி.. அசர வைக்கும் சஞ்சு சாம்சன் சொத்து மதிப்பு!
Related image2
Sanju Samson: வேற யாரு, நம்ம சஞ்சு தான்! உலகக்கோப்பையில் கலக்கிய சஞ்சு சாம்சனுக்கு ஐசிசி விருது..
34
உலகக்கோப்பையில் அதிரடி
Image Credit : Asianet News

உலகக்கோப்பையில் அதிரடி

இன்ஸ்டாகிராமில் கீர்த்தி சுரேஷை சஞ்சு சாம்சன் ஓவர்டேக் செய்ததற்கு காரணம் இல்லாமல் இல்லை. 026 T20 உலகக்கோப்பையை இந்தியா மீண்டும் கைப்பற்ற சஞ்சு முக்கிய காரணமாக விளங்கினார். உலகக்கோப்பை ஆரம்பத்தில் சஞ்சு சாம்சனுக்கு ப்ளேயிங் XI-ல் இடம் கிடைக்கவில்லை. 

ஆனால், சூப்பர் 8 சுற்றில் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்டார். அதன்பிறகு, அணியின் மிகப்பெரிய மேட்ச்-வின்னராகவே மாறிவிட்டார். ஜிம்பாப்வேக்கு எதிராக 24 ரன்களுடன் நிதானமாகத் தொடங்கினார். ஆனால், அடுத்தடுத்து போட்டிகளில் தனது அதிரடி ஆட்டத்தைக் காட்டினார்.

44
தொடர் நாயகன்
Image Credit : Getty

தொடர் நாயகன்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்து, இந்தியாவை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றார். வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்துக்கு எதிராக 89 ரன்கள் விளாசி, இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதுவே இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. தனது சூப்பரான ஆட்டத்தை இறுதிப் போட்டியிலும் வெளிப்படுத்தினார். ஃபைனலிலும் 89 ரன்கள் அடித்து, இந்தியா T20 உலகக்கோப்பையைத் தக்கவைக்க உதவினார். மார்ச் மாதத்தில் மட்டும், முக்கியமான மூன்று போட்டிகளில் 275 ரன்கள் குவித்துள்ளார்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
சஞ்சு சாம்சன்
ஐபிஎல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
மகளிர் உலகக்கோப்பையில் புதிய புரட்சி.. ஐசிசியின் மாபெரும் ‘பரிசு’ மழை.. அடேங்கப்பா! இத்தனை கோடிகளா?
Recommended image2
Sanju Samson: வேற யாரு, நம்ம சஞ்சு தான்! உலகக்கோப்பையில் கலக்கிய சஞ்சு சாம்சனுக்கு ஐசிசி விருது..
Recommended image3
யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? அறிமுகப் போட்டியிலேயே ஐபிஎல்-லை அதிரவைத்த புதிய புயல்!
Related Stories
Recommended image1
Sanju Samson: பேட்டிங்கில் மட்டுமல்ல; கல்லா கட்டுவதிலும் 'சேட்டன்' கில்லாடி.. அசர வைக்கும் சஞ்சு சாம்சன் சொத்து மதிப்பு!
Recommended image2
Sanju Samson: வேற யாரு, நம்ம சஞ்சு தான்! உலகக்கோப்பையில் கலக்கிய சஞ்சு சாம்சனுக்கு ஐசிசி விருது..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved