MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • Sanju Samson: பேட்டிங்கில் மட்டுமல்ல; கல்லா கட்டுவதிலும் 'சேட்டன்' கில்லாடி.. அசர வைக்கும் சஞ்சு சாம்சன் சொத்து மதிப்பு!

Sanju Samson: பேட்டிங்கில் மட்டுமல்ல; கல்லா கட்டுவதிலும் 'சேட்டன்' கில்லாடி.. அசர வைக்கும் சஞ்சு சாம்சன் சொத்து மதிப்பு!

முதன்முறையாக சிஎஸ்கே அணிக்காக விளையாடும் சஞ்சு சாம்சன் முதல் மூன்று போட்டியில் சொதப்பி ரசிகர்களின் அதிருப்தியை சம்பாதித்து இருந்தார். ஆனால் இப்போது சூப்பர் சதம் விளாசி தான் யார் என்று நிரூபித்துள்ளார். 

2 Min read
Author : Rayar r
Published : Apr 12 2026, 01:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
சூப்பர் சதம் விளாசிய சஞ்சு சாம்சன்
Image Credit : x@IPL

சூப்பர் சதம் விளாசிய சஞ்சு சாம்சன்

ஐபிஎல் 2026 தொடரில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு வழியாக தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. நேற்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே 20 ஓவர்களில் இரண்டு விக்கெட் மட்டுமே இழந்து 212 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் வெறும் 56 பந்துகளில் 115 ரன்கள் குவித்தார். மொத்தம் 15 பவுண்டரிகளையும், 4 சிக்சர்களையும் விளாசி ஆட்ட நாயகனாக ஜொலித்தார்.

25
சஞ்சு சாம்சன் சொத்து மதிப்பு
Image Credit : x@IPL

சஞ்சு சாம்சன் சொத்து மதிப்பு

முதன்முறையாக சிஎஸ்கே அணிக்காக விளையாடும் சஞ்சு சாம்சன் முதல் மூன்று போட்டியில் சொதப்பி ரசிகர்களின் அதிருப்தியை சம்பாதித்து இருந்தார். ஆனால் இப்போது சூப்பர் சதம் விளாசி தான் யார் என்று நிரூபித்துள்ளார். கிரிக்கெட்டில் தொடர்ந்து கலக்கி வரும் சஞ்சு சாம்சன் சொத்து மதிப்பு குறித்து விரிவாக பார்ப்போம். 2026 ஆம் ஆண்டு நிலவரப்படி சஞ்சு சாம்சன் நிகர சொத்து மதிப்பு ரூபாய் 85 கோடி முதல் 100 கோடி வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் சஞ்சுவுக்கு ரூபாய் 6 கோடி மதிப்பில் பாரம்பரிய வடிவமைப்பு கொண்ட வீடு உள்ளது.

Related Articles

Related image1
Sanju Samson: 18 ஆண்டுகளாக தோனியால் செய்ய முடியாததை வெறும் 4 போட்டிகளில் செய்து காட்டிய சஞ்சு..
Related image2
சஞ்சு சாம்சனுக்காக ஊழியர்களுக்கு போனஸ் கொடுத்த தொழிலதிபர்.. நேரில் இன்ப அதிர்ச்சி கொடுத்த சேட்டன்!
35
வருமான ஆதாரங்கள் என்னென்ன?
Image Credit : x@IPL

வருமான ஆதாரங்கள் என்னென்ன?

மேலும் சஞ்சு ரியல் எஸ்டேட் துறையிலும் ரூபாய் 10 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளார். மும்பை பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் ரூபாய் ஒன்றரை கோடி மதிப்பில் பிளாட்கள் உள்ளன. சஞ்சு சாம்சன் வருமானத்தை பார்த்தோம் என்றால் சிஎஸ்கே அணிக்காக ரூ.18 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்திய அணிக்காக பிசிசிஐ ஒப்பந்த மூலம் ஆண்டுக்கு ரூபாய் ஒரு கோடி சம்பாதிக்கிறார்.

சொகுசு கார்கள்

இது தவிர பல்வேறு பிராண்டுகளின் விளம்பரங்கள், போட்டி கட்டணம், போனஸ் மற்றும் பரிசுத்தொகை ஆகியவையும் சஞ்சு சாம்சனின் வருமான ஆதாரங்களாக உள்ளன. சஞ்சு சாம்சனிடம் பல கோடிகள் மதிப்புள்ள விலை உயர்ந்த ரேஞ்ச் ரோவர், மெர்சிடிஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ, ஆடி என பல்வேறு சொகுசு கார்கள் உள்ளன.

45
சிஎஸ்கே வைத்த நம்பிக்கை
Image Credit : x@IPL

சிஎஸ்கே வைத்த நம்பிக்கை

ராஜஸ்தானில் இருந்து சிஎஸ்கேவுக்கு வந்த சஞ்சு சாம்சன் முதல் 3 போட்டிகளில் சரியாக விளையாடாததால் அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த கடினமான நேரத்தில் தன் மீது நம்பிக்கை வைத்த சிஎஸ்கே நிர்வாகத்துக்கு சஞ்சு சாம்சன் நன்றி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நேற்று ஆட்டம் முடிந்த பிறகு பேசிய சஞ்சு சாம்சன், ''உண்மையை சொன்னால், இந்த வெற்றி எனக்கு ரொம்ப முக்கியமானது. என் மீது அவர்கள் (சிஎஸ்கே) காட்டிய நம்பிக்கை, என்னை அணிக்குத் திரும்ப எடுத்தது, இதற்கெல்லாம் நான் ஏதாவது செய்ய வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சி எனக்குள் இருந்தது.

55
இது எனது 2வது வீடு
Image Credit : ANI

இது எனது 2வது வீடு

'நாங்கள் இன்னும் போட்டியில் இருக்கிறோம்' என்று சொல்ல நான் களத்தில் நிற்க வேண்டும் என நினைத்தேன். அதிர்ஷ்டவசமாக, எல்லாம் சரியாக நடந்தது. நீங்கள் சொல்வது போல், ஒரு புதிய அணிக்கு வந்து இப்படி ஒரு தொடக்கத்தைக் கொடுப்பது எளிதல்ல. ஆனால் இது ஒரு புதிய அணி போலவே எனக்குத் தெரியவில்லை. இது இன்னொரு வீட்டுக்கு வந்தது போல இருக்கிறது. 

இங்குள்ள மக்கள் மிகவும் இனிமையானவர்கள், நல்லவர்கள். எல்லோரும் மிகவும் அமைதியாகவும் ரிலாக்ஸாகவும் இருக்கிறார்கள். நாங்கள் தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோற்ற பிறகும், இன்று வெறும் 50 வினாடிகள் மட்டுமே மீட்டிங் நடந்தது. இதுவே இந்த அணி நிர்வாகம் எப்படிப்பட்டது என்பதைக் காட்டுகிறது. இது என் இயல்போடு சரியாகப் பொருந்துகிறது'' என்று கூறியுள்ளார்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
சஞ்சு சாம்சன்
சென்னை சூப்பர் கிங்ஸ்
விளையாட்டு
ஐபிஎல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Yuzvendra Chahal : ரோட்ல இப்படித்தான் பண்ணுவீங்களா?" - சர்ச்சையில் சிக்கிய யுஸ்வேந்திர சாஹல்? வைரலாகும் வீடியோ!
Recommended image2
Sanju Samson: 18 ஆண்டுகளாக தோனியால் செய்ய முடியாததை வெறும் 4 போட்டிகளில் செய்து காட்டிய சஞ்சு..
Recommended image3
SRH-ன் இமாலய இலக்கை தவிடுபொடியாக்கிய பஞ்சாப்.. 200+ ரன்களை சேஸ் செய்து உலக சாதனை!
Related Stories
Recommended image1
Sanju Samson: 18 ஆண்டுகளாக தோனியால் செய்ய முடியாததை வெறும் 4 போட்டிகளில் செய்து காட்டிய சஞ்சு..
Recommended image2
சஞ்சு சாம்சனுக்காக ஊழியர்களுக்கு போனஸ் கொடுத்த தொழிலதிபர்.. நேரில் இன்ப அதிர்ச்சி கொடுத்த சேட்டன்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved