MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • மும்பையை கதற விட்ட சஞ்சு சாம்சன்.. மிரட்டல் சதம்.. சிஎஸ்கேவுக்காக புதிய சாதனை படைத்த சேட்டன்!

மும்பையை கதற விட்ட சஞ்சு சாம்சன்.. மிரட்டல் சதம்.. சிஎஸ்கேவுக்காக புதிய சாதனை படைத்த சேட்டன்!

2026 ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் சற்றே மந்தமாக ஆடிய சஞ்ச சாம்சன் இப்போது பட்டையைக் கிளப்புகிறார். டெல்லிக்கு எதிராக ஏற்கெனவே ஒரு சதம் அடித்திருந்த நிலையில், தற்போது 2வது சதம் அடித்துள்ளார்.

2 Min read
Author : Rayar r
Published : Apr 23 2026, 10:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சஞ்சு சாம்சன் சதம்
Image Credit : ANI

சஞ்சு சாம்சன் சதம்

ஐபிஎல்-ன் எல் கிளாசிகோ எனப்படும் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மீண்டும் ஒருமுறை ஒற்றை ஆளாக தன் தோளில் சுமந்திருக்கிறார் கேரள வீரர் சஞ்சு சாம்சன். மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக வான்கடே மைதானத்தில் நடந்த இந்த போட்டியில், டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, சஞ்சு சாம்சனின் அபார சதத்தால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் குவித்தது. போட்டியின் கடைசிப் பந்தை பவுண்டரிக்கு விரட்டி, சஞ்சு தனது சதத்தை (101*) பூர்த்தி செய்தார். 54 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன், கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
கடைசி ஓவரில் சதம்
Image Credit : X/@ChennaiIPL

கடைசி ஓவரில் சதம்

கிரிஷ் பகத் வீசிய கடைசி ஓவரில், சஞ்சு சதம் அடிக்க 15 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தையே சிக்ஸருக்குப் பறக்கவிட்டு 90 ரன்களைக் கடந்தார். அடுத்த இரண்டு பந்துகளில் சிங்கிள் எடுக்கவில்லை. நான்காவது பந்தில் மீண்டும் ஒரு பிரம்மாண்ட சிக்ஸர் அடித்தார். அப்போது அவர் 97 ரன்களில் இருந்தார். 

ஐந்தாவது பந்திலும் சிங்கிள் எடுக்க மறுத்தார்.கடைசிப் பந்தை பவுண்டரிக்கு விரட்டி சதத்தை நிறைவு செய்ததோடு, சென்னை அணிக்கு ஒரு வலுவான ஸ்கோரையும் பெற்றுத் தந்தார். சஞ்சுவுக்கு அடுத்தபடியாக, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் எடுத்த 22 ரன்களே அணியின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.

டெவால்ட் பிரெவிஸ் 11 பந்துகளில் 21 ரன்களும், கார்த்திக் ஷர்மா 19 பந்துகளில் 18 ரன்களும், ஜேமி ஓவர்டன் 7 பந்துகளில் 15 ரன்களும் எடுத்தனர். மும்பை தரப்பில், கன்சஃபர் 25 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும், அஷ்வினி குமார் 37 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஜஸ்பிரித் பும்ரா 4 ஓவர்களில் 31 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார்.

Related Articles

Related image1
கீர்த்தி சுரேஷை ஓவர்டேக் செய்த சேட்டன்.. கேரளாவின் இன்ஸ்டா 'கிங்' ஆன சஞ்சு சாம்சன்!
Related image2
Sanju Samson: பேட்டிங்கில் மட்டுமல்ல; கல்லா கட்டுவதிலும் 'சேட்டன்' கில்லாடி.. அசர வைக்கும் சஞ்சு சாம்சன் சொத்து மதிப்பு!
34
சஞ்சு சாம்சன் புதிய சாதனை
Image Credit : ANI

சஞ்சு சாம்சன் புதிய சாதனை

இன்றைய சதம் சஞ்சு சாம்சனின் 5வது ஐபிஎல் சதமாகும். இதன்மூலம், ஐபிஎல்-இல் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் கே.எல். ராகுலுடன் நான்காவது இடத்தை பகிர்ந்து கொள்கிறார். இந்த பட்டியலில் விராட் கோலி (8), ஜோஸ் பட்லர் (7), கிறிஸ் கெய்ல் (6) ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர். மேலும், ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சதம் அடித்த முதல் சிஎஸ்கே வீரர் என்ற பெருமையையும் சாம்சன் பெற்றுள்ளார்.

44
ஒரே சீசனின் 2 சதங்கள்
Image Credit : x@IPL

ஒரே சீசனின் 2 சதங்கள்

2026 ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் சற்றே மந்தமாக ஆடிய சஞ்சு, இப்போது பட்டையைக் கிளப்புகிறார். டெல்லிக்கு எதிராக ஏற்கெனவே ஒரு சதம் அடித்திருந்த நிலையில், தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 54 பந்துகளில் 101 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம், ஒரே சீசனில் 2 சதங்கள் அடித்த முதல் சிஎஸ்கே வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
சஞ்சு சாம்சன்
ஐபிஎல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vaibhav Sooryavanshi: 15 வயதில் உலக சாதனை! பொல்லார்டையே மிஞ்சிய வைபவ்.. டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு!
Recommended image2
IPL 2022 Playoff Scenarios: பிளேஆஃப் ரேஸில் யாருக்கு இடம்? சிஎஸ்கே-க்கு வாய்ப்பு உள்ளதா? முழு விவரம்
Recommended image3
ICC ODI Rank: நம்பர் 1 இடத்தில் ‘கெத்து’ காட்டும் இந்தியா.. ஆஸ்திரேலியா எந்த இடம்?
Related Stories
Recommended image1
கீர்த்தி சுரேஷை ஓவர்டேக் செய்த சேட்டன்.. கேரளாவின் இன்ஸ்டா 'கிங்' ஆன சஞ்சு சாம்சன்!
Recommended image2
Sanju Samson: பேட்டிங்கில் மட்டுமல்ல; கல்லா கட்டுவதிலும் 'சேட்டன்' கில்லாடி.. அசர வைக்கும் சஞ்சு சாம்சன் சொத்து மதிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved