MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IPL 2026: CSK vs SRH: இம்பேக்ட் பிளேயராக தோனி? மேட்ச் வின்னர் கம்பேக்! சிஎஸ்கே பிளேயிங் லெவன்!

IPL 2026: CSK vs SRH: இம்பேக்ட் பிளேயராக தோனி? மேட்ச் வின்னர் கம்பேக்! சிஎஸ்கே பிளேயிங் லெவன்!

ஐபிஎல் 2026 தொடரின் முக்கியமான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபத்துக்கு எதிராக சிஎஸ்கே இன்று மோதுகின்றன. இது தோனியின் கடைசி ஆட்டமா? என்பது குறித்தும், சிஎஸ்கே பிளேயிங் லெவன் குறித்தும் பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : May 18 2026, 12:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சிஎஸ்கே மோதல்
Image Credit : x

சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சிஎஸ்கே மோதல்

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி விட்டது. நேற்று பஞ்சாபை வீழ்த்திய ஆர்சிபி அணி முதல் அணியாக கெத்தாக பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. மேலும் குஜராத், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சிஎஸ்கே, ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய போட்டி போடுகின்றன. இந்த நிலையில், இன்றைய முக்கியமான போட்டியில் சிஎஸ்கே மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகின்றன.

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் ஹைதராபாத் அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும். அதே வேளையில் சிஎஸ்கே அணி தோற்றால் தொடரில் இருந்து வெளியேறி விடும். ஆகவே சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றை தக்க வைக்க இன்றைய போட்டியிலும், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். மேலும் மற்ற அணிகளின் முடிவுகளும் தங்களுக்கு சாதகமாக இருந்தால் தான் சிஎஸ்கேவால் பிளே ஆப் சுற்றுக்குள் செல்ல முடியும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
சிஎஸ்கே பிளே ஆப் சுற்றுக்குள் செல்லுமா?
Image Credit : ANI

சிஎஸ்கே பிளே ஆப் சுற்றுக்குள் செல்லுமா?

இதுவரை நடப்பு ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே 6 போட்டிகளில் வெற்றியும், 6 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. சென்னை அணியில் சஞ்சு சாம்சன் நல்ல நிலையில் உள்ளார். அவர் சிறப்பாக விளையாடும்பொதெல்லாம் அணி வெற்றி பெற்றுள்ளது. ஆகவே அவரது பார்ம் தொடர்வது மிகவும் முக்கியமானதாகும். கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. உர்வில் படேல் ஓரளவு சிறப்பாக விளையாடுகிறார்.

ஆனால் டெவால்ட் பிரெவிஸ், ஷிவம் துபே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. பவுலிங்கை பொறுத்தவரை அன்ஷுல் கம்போஜ் நல்ல நிலையில் உள்ளார். நூர் அகமது நிலையாக விக்கெட் வீழ்த்தவில்லை. ஜேமி ஓவர்டனுக்கு பதிலாக வந்த ஸ்பென்ஷன் ஜான்சன் முதல் ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. முகேஷ் செளத்ரியும் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமாகும்.

34
தல தோனிக்கு கடைசி ஆட்டமா?
Image Credit : X/@ChennaiIPL

தல தோனிக்கு கடைசி ஆட்டமா?

சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் 44 வயதான மகேந்திர சிங் தோனி, காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இந்த சீசனில் சென்னையில் சிஎஸ்கே விளையாடும் கடைசி போட்டி இது என்பதால் இன்றைய ஆட்டத்தில் தோனி விளையாடுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் இது தோனியின் கடைசி ஆட்டமாக இருக்கும் எனவும் அவருக்கு பிரியாவிடை கொடுக்க சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆகவே தோனி விளையாடுவாரா? இல்லையா? என்பது ஆட்டம் தொடங்கும்போது தான் தெரியவரும்.

சன்ரைசஸ் ஹைதரபாத் அணிக்கு எதிரான இன்றைய முக்கிய ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனில் ஒரு சில மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆட்டத்தில் விளையாடாத இடது கை ஸ்பின்னர் அகீல் ஹொசைன் பிளேயிங் லெவனில் இடம்பெற வாய்ப்புள்ளது. மற்றபடி வேறு எந்த மாற்றமும் இருக்காது. ஒருவேளை தோனி இம்பேக்ட் பிளேயராக களமிறங்க வாய்ப்புள்ளது. ஆனால் அதை உறுதியாக சொல்ல முடியாது.

44
சிஎஸ்கே அணி பிளேயிங் லெவன்
Image Credit : X

சிஎஸ்கே அணி பிளேயிங் லெவன்

சன்ரைசஸ் ஹைதரபாத் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவன்: ருத்ராஜ் கெய்க்வாட் (கேப்டன்), சஞ்சு சாம்சன், உர்வில் படேல், கார்த்திக் சர்மா, டெவால்ட் பிரவெஸ், ஷிவம் துபே, பிரசாந்த் வீர், அகீல் ஹொசைன், அன்ஷுல் கம்போஜ், ஸ்பென்சர் ஜான்சன் மற்றும் நூர் அகமது. இம்பேக் பிளேயர்: முகேஷ் செளத்ரி அல்லது தோனி.

சன்ரைசர்ஸ் ஹைதராத் அணியின் பிளேயிங் லெவன்: பேட் கம்மின்ஸ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், ஹென்ரிச் கிளாசன், சமரன், நிதிஷ் குமார் ரெட்டி, சலீல் அரோரா, ஹர்ஸ் துபே, ஷிவாங் குமார், இஷான் மலிங்கா, சகீப் உசேன்

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஐபிஎல்
சிஎஸ்கே
எம். எஸ். தோனி
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs WI: 250 ரன் அடிச்சும் தோத்துட்டோமே.. இந்திய பவுலிங் கோச்சை விளாசித் தள்ளிய ஜாம்பவான்!
Recommended image2
Harmanpreet Kaur Net Worth: கோடிகளை குவித்த ஹர்மன்ப்ரீத் கவுர்! மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு?
Recommended image3
KL Rahul: இந்தியாவின் நியூ ரன் மெஷின்.. ஒரே சதத்தில் பல சாதனைகளை தகர்த்த கே.எல்.ராகுல்!
Related Stories
Recommended image1
Dhoni's Future: தோனி 2026 IPL-ல் விளையாடுவது கஷ்டம்; CSK சொதப்பினால் மட்டுமே வாய்ப்பு - அஷ்வின்
Recommended image2
PBKS vs RCB: முதல் அணியாக பிளேஆஃப்க்குள் கெத்தாக நுழைந்தது ஆர்சிபி! பஞ்சாப் பரிதாபம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved