will gautam gambhir play for chennai team
கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த கௌதம் காம்பீர், இந்த முறை சென்னை அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
11வது ஐபிஎல் டி20 தொடர் வரும் ஏப்ரல் மாதம் நடக்க இருக்கிறது. இதற்கான ஏலம் வரும் 28ம் தேதி பெங்களூருவில் நடைபெறுகிறது. இரண்டு ஆண்டுகள் தடைக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குகிறது.
ஒவ்வொரு அணியும் மூன்று வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம். அந்த வகையில் சென்னை அணியின் ஆஸ்தான வீரர்களான தோனி, சுரேஷ் ரெய்னா, ஜடேஜா ஆகிய மூவரையும் அந்த அணி தக்க வைத்துள்ளது.
கொல்கத்தா அணிக்கு ஐபிஎல் தொடரை வென்று கொடுத்த அந்த அணியின் கேப்டனாக இருந்த கௌதம் காம்பீரை இந்த முறை சென்னை அணி ஏலத்தில் எடுக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் பரவுகின்றன. சமூக வலைதளங்களில் இந்த தகவல் வைரலாக பரவுகிறது.
