Will Canada qualify for World Group Circuit? Today is the beginning of the game ...

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா - கனடா மோதும் உலக குரூப் பிளே ஆஃப் சுற்று கனடாவின் எட்மான்டன் நகரில் இன்றுத் தொடங்குகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளும் உலக குரூப் சுற்றில் விளையாடும் வாய்ப்பை நழுவவிட்ட இந்திய அணி இந்த முறை கனடாவை வீழ்த்தி உலக குரூப் சுற்றுக்கு தகுதி பெறுமா?

கனடா அணியைப் பொறுத்தவரை முன்னணி வீரரான மிலோஸ் ரயோனிச் காயம் காரணமாக இடம் பெறவில்லை.

உலகின் 51-ஆம் நிலை வீரரான டெனிஸ் ஷபோவெலாவ், 82-ஆம் நிலை வீரரான வசேக் போஸ்பிஸில் ஆகியோர் ஒற்றையர் பிரிவில் அந்த அணிக்கு வலிமை சேர்க்கின்றனர்.

டெனிஸ் ஷபோவெலாவ், சமீபத்திய காலங்களில் ரஃபேல் நடால், ஜுவான் மார்ட்டின் டெல் போட்ரோ, ஜோ வில்பிரைட் சோங்கா போன்ற முன்னணி வீரர்களுக்கு அதிர்ச்சித் தோல்வி அளித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், அமெரிக்க ஓபனில் 4-வது சுற்றுக்கு முன்னேறிய இளம் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

வசேக் போஸ்பிஸில் மிகுந்த அனுபவம் கொண்ட வீரர். இரட்டையர் பிரிவில் மூத்த வீரர் ஒருவருடன் களமிறங்க வாய்ப்புகள் அதிகம்.

இந்திய அணியைப் பொறுத்தவரையில் ஒற்றையர் பிரிவில் யூகி பாம்ப்ரி, ராம்குமார் ஆகியோர் வலிமை சேர்க்கின்றனர்.

யூகி பாம்ப்ரி அபாரமாக ஆடி பிரான்ஸின் கேல் மான்பில்ûஸயும், ராம்குமார், ஆஸ்திரியாவின் டொமினிக் தீமையும் வீழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இரட்டையர் பிரிவில் ரோஹன் போபண்ணா - சாகேத் மைனேனி இணை இந்தியாவுக்கு கூடுதல் வலு சேர்க்கிறது.