Who is the Indian team to participate in various matches overseas?
இந்திய அணி வெளிநாடுகளில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் பாய்சுங் பூட்டியா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னாள் கேப்டன் பாய்சுங் பூட்டியா நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், "வரும் 2019-ஆம் ஆண்டின் ஏஎப்சி ஆசியக் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா கடினமான குழுவில் இடம் பெற்றுள்ளது.
பஹ்ரைன், தாய்லாந்து, ஐக்கிய அரபு நாடுகள் போன்றவை வலுவானவையாக திகழ்ந்தாலும், இந்தியா 2-வது சுற்றுக்கு முன்னேறுவது ஒன்றும் கடினமாதில்லை.
நாம் இடம் பெற்றுள்ள பிரிவுக்காக மகிழ்ச்சி கொள்ள வேண்டும். தரவரிசைப் பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளதற்கு வீரர்களின் அர்ப்பணிப்பு உணர்வே காரணம்.
கொரியா, ஈராக், ஈரான், ஜப்பான் போன்ற பலமான அணிகள் பிரிவில் நாம் இடம் பெறாதது நன்மை தருவதாகும். இந்திய அணி வெளிநாடுகளில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்க வேண்டும்.
இன்டர்கான்டினென்டல் கோப்பை போட்டியும் சிறந்த ஒரு வாய்ப்பாகும். குறிப்பாக நியூஸிலாந்து, கென்யா போன்ற அணிகள் கலந்து கொள்கின்றன.
ஆசியக் கோப்பை போட்டிகளுக்கு முன்னதாக துபாயில் பல்வேறு போட்டிகளில் இந்தியா ஆட வேண்டும்" என்று அவர் கூறினார்.
