Viswanathan Anand who was drunk to be the world champion in chess competition ...
நார்வே செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் நடப்பு உலக சாம்பியன் கார்ல்சன் மோதிய ஆட்டம் சமனில் முடிவடைந்தது.
அல்டிபாக்ஸ் நார்வே செஸ் போட்டி ஸ்டேவென்ஜர் நகரில் நடைப்பெற்று வருகிறது.
இதில் 5-ஆம் சுற்று ஆட்டங்கள் நடந்து வரும் நிலையில் நேற்று ஐந்து முறை உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் - நடப்புச் சாம்பியன் கார்ல்சனும் மோதினர்.
வெள்ளை காய்களுடன் ஏற்கெனவே இரு ஆட்டங்களில் வென்றிருந்த கார்ல்சனால் இந்த போட்டியில் வெல்ல முடியவில்லை.
45 நகர்த்தல்களுக்கு பின்னர் ஆட்டத்தை சமன் செய்ய இருவரும் ஒப்புக் கொண்டனர்.
இதன்மூலம் கார்ல்சனுடன் நடந்த போட்டியை எளிதாக சமன் செய்தார் ஆனந்த்.
எனினும், கார்ல்சன் 3.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
ஆனந்த் மூன்றாம் இடத்திலும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
