virat kozhi challanging modi
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மோடிக்கு சவால் விடுத்த விராட்...!
தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நொடிக்கு நொடிக்கு அடுத்த என்ன நடக்க போகிறதோ என்ற சிந்தனை தான் மேலோங்கி நிற்கிறது.
இதற்கிடையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்தன் விராட் கோலி, ஒரு வித்தியாசமான சவாலை பிரதமர் மோடிக்கே வைத்துள்ளார்
அது என்ன அப்படிப்பட்ட சவால் என எண்ண தோன்றுகிறதா..?
அதாவது விளையாட்டு துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தான் உடற்பயிற்சி செய்வது போல ஒரு வீடியோவை எடுத்து " நான் பிட்டாக இருந்தால் தான் நாடே பிட்டாக இருக்கும் அதனால் அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என வலியுறுத்தி சாய்னா நேவால் ஹிர்த்திக் ரோஷன் ஆகியோருக்கு...இந்த வீடியோவை டேக் செய்து உள்ளார்.
இதனை ஏற்றுக்கொண்ட விராட் கோலி, தான் உடற்பயிற்சி செய்வது போல வீடியோ எடுத்து அதனை தன் மனைவி அனுஷ்கா ஷர்மா, பிரதமர் ,தல தோனியிடம் பிட்னஸ்கான சவாலை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
விராட் கோலியின் சவாலை ஏற்றுக்கொண்ட மோடி
இதற்கு பதில் அளித்துள்ள பிரதமர், தான் கோலியின் சவாலை ஏற்பதாகவும் விரைவில் தான் உடல் உறுதியாக உள்ளதை நிரூபிக்கும் விதமாக வீடியோ வெளியிடுகிறேன் என தெரிவித்து உள்ளார்.
விளையாடுத்துறை அமைச்சர் "நாம் பிட்டாக இருந்தால் தான் நாடே பிட்டாக இருக்கும் என தெரிவித்ததும், சவாலை ஏற்றுக் கொண்ட விராட், பிரதமருக்கு டேக் செய்துள்ளதை பார்க்கும் போது, அரசியல் கலந்த விளையாட்டாக தோன்றும் பாணியில் உள்ளது என்று பலரும் கருத்து தெரிவித்து உள்ளனர்...
காரணம் நாம் பிட்டாக இருந்தால் தான் நாடே பிட்டாக இருக்கும் என்ற வாசகம் தான் ..வேறு என்ன ..?
இதனை மிக அழகாக எடுத்துக்கொண்ட பிரதமர், விரைவில் தான் பிட்டாக தான் உள்ளேன் என்பதை நிரூபிக்கும் வீடியோ வெளியிடுவேன் என மோடி தெரிவித்து இருப்பது ஆழாமாக பார்க்கப்படுகிறது
