Asianet News TamilAsianet News Tamil

ஒலிம்பிக் வரலாற்றில் நடந்த முதல் சம்பவம் – 100மீ தடகளப் போட்டியில் 10 வினாடிகளுக்குள் வந்த 8 வீரர்கள்!

பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் 100மீ தடகளப் போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த நோவா லைல்ஸ் 9.79 வினாடிகளில் கடந்து புதிய வரலாற்று சாதனையை நிகழ்த்தி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

USA based track athlete Noah Lyles has won the gold medal in the 100m athletics event with 9.79 seconds at the Paris 2024 Olympics rsk
Author
First Published Aug 5, 2024, 2:25 PM IST | Last Updated Aug 5, 2024, 2:25 PM IST

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33ஆவது ஒலிம்பிக் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், அமெரிக்கா 19 தங்கம், 27 வெள்ளி மற்றும் 26 வெண்கலம் என்று மொத்தமாக 72 பதக்கங்களை கைப்பற்றி பதக்கப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் தான், தடகளப் போட்டியில் 100மீ ஓட்டப் போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த நோவா லைல்ஸ் 9.79 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இந்தியா விளையாடும் போட்டிகள் நாள் 10 – பேட்மிண்டனில் லக்‌ஷயா சென் வெண்கலப் பதக்கம் வெல்ல வாய்ப்பு!

இவரைத் தொடர்ந்து ஜமைக்காவைச் சேர்ந்த கிஷன் தாம்சன் 9.79 வினாடிகளில் கடந்திருந்தாலும் இவருக்கும் லைல்ஸூக்கும் இடையில் 0.784 வினாடிகள் வித்தியாசம் இருந்துள்ளது. இதே போன்று அமெரிக்காவைச் சேர்ந்த கெர்லி 9.81 வினாடிகளில் 3ஆவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இந்த நிலையில் தான் இந்த போட்டியில் பங்கேற்ற 8 வீரர்களும் 10 வினாடிகளுக்குள் இலக்கை கடந்து சாதனை படைத்துள்ளனர்.

முதல் முறையாக சாம்பியனான திண்டுக்கல் டிராகன்ஸ் – ரவிச்சந்திரன் அஸ்வினை கொண்டாடும் ரசிகர்கள்!

ஒலிம்பிக் வரலாற்றில் இப்படியொரு நிகழ்வு நடப்பது என்பது இதுவே முதல் முறை. 4ஆவது இடத்தில் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த அகானி சிம்பினே 9.82 வினாடிகளிலும், இத்தாலியைச் சேர்ந்த ஜாக்கோப்ஸ் 9.85 வினாடிகளில் கடந்து 5ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். இவர்களது வரிசையில் முறையே போட்ஸ்வானா நாட்டைச் சேர்ந்த லெட்சைல் டெபோகோ 9.86 வினாடிகளிலும், அமெரிக்காவைச் சேர்ந்த பெட்னாரேக் 9.88 வினாடிகளிலும், ஜமைக்காவின் ஓப்லிக் செவில்லே 9.91 வினாடிகளிலும் 100மீ தூரத்தை கடந்து சாதனை படைத்திருக்கின்றனர்.

லைகா கோவை கிங்ஸிற்கு ஆப்பு வச்ச மழை – 129 ரன்களில் சுருட்டிய திண்டுக்கல் டிராகன்ஸ்!

ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த தடகள வீரர் உசைன் போல்ட் கடந்த 2012 ஆம் ஆண்டு ஒலிம்பிக் தொடரில் 100மீ ஓட்டப் போட்டியில் பந்தய தூரத்தை 9.63 வினாடிகளில் கடந்து வரலாற்று சாதனை படைத்திருக்கிறார். இதுவரையில் இந்த சாதனையை எந்த தடகள வீரரும் முறியடிக்கவில்லை.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios