Asianet News TamilAsianet News Tamil

முதல் முறையாக சாம்பியனான திண்டுக்கல் டிராகன்ஸ் – ரவிச்சந்திரன் அஸ்வினை கொண்டாடும் ரசிகர்கள்!

லைகா கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் 2024 தொடரின் இறுதிப் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக டிராபியை கைப்பற்றியுள்ளது.

Dindigul Dragons becomes champions for the first time after Beat Lyca Kovai Kings by 6 wickets difference in TNPL 2024 Final at MA Chidambaram rsk
Author
First Published Aug 4, 2024, 11:47 PM IST | Last Updated Aug 5, 2024, 11:40 AM IST

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 8ஆவது சீசனுக்கான இறுதிப் போட்டி தற்போது சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. சென்னையில் பெய்த மழையின் காரணமாக டாஸ் தாமதம் ஏற்பட்டது. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய லைகா கோவை கிங்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. சுஜய் மற்றும் சுரேஷ் குமார் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் சுஜய் 22 ரன்களில் ஆட்டமிழக்க, சுரேஷ் குமார் 11 ரன்னில் வெளியேறினார். சாய் சுதர்சன் 14, முகிலேஷ் 0 என்று வரிசையாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

லைகா கோவை கிங்ஸிற்கு ஆப்பு வச்ச மழை – 129 ரன்களில் சுருட்டிய திண்டுக்கல் டிராகன்ஸ்!

அதன் பிறகு ராம் அரவிந்த் மற்றும் ஆதிக் உர் ரஹ்மாம் இருவரும் இணைந்து நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். எனினும், ஆதிக் 25 ரன்களில் வெளியேறவே, அரவிந்த் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியில் வந்த கேப்டன் ஷாருக் கான் 3 ரன்னில் வெளியேற, முகமது 15 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியாக லைகா கோவை கிங்ஸ் 129 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Paris 2024, Novak Djokovic: ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக தங்கப் பதக்கம் கைப்பற்றி சாதனை படைத்த ஜோகோவிச்!

திண்டுக்கல் டிராகன்ஸ் அணியைப் பொறுத்த வரையில் பவுலிங்கில் சந்தீப் வாரியர், வருண் சக்கரவரத்தி மற்றும் பி விக்னேஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். சுபோத் பதி ஒரு விக்கெட் எடுத்தார். இதைத் தொடர்ந்து 130 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு திண்டுக்கல் டிராகன்ஸ் பேட்டிங் செய்தது.

இதில், தொடக்க வீரர்கள் விமல் குமார் மற்றும் ஷிவம் சிங் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் பாபா இந்திரஜித் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். எனினும் அஸ்வின் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். இதே போன்று பாபா இந்திரஜித் 32 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்திய அணிக்கு ஆப்பு வச்ச சுழல் சக்கரவர்த்தி வாண்டர்சே – ஒரே வீரர் 6 விக்கெட் எடுத்து சாதனை!

கடைசியில் வந்த சரத் குமார் மற்றும் பூபதி குமார் இருவரும் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இதில் சரத் குமார் 25 ரன்கள் எடுத்தார். இறுதியாக திண்டுக்கல் டிராகன்ஸ் 18.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று டிராபியை கைப்பற்றியுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios