Asianet News TamilAsianet News Tamil

இந்திய அணிக்கு ஆப்பு வச்ச சுழல் சக்கரவர்த்தி வாண்டர்சே – ஒரே வீரர் 6 விக்கெட் எடுத்து சாதனை!

இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்தியா ஜெஃப்ரி வாண்டர்சே சுழலில் சிக்கி முதல் 6 விக்கெட்டுகளை இழந்து ரன்கள் சேர்க்க தடுமாறி வருகிறது.

India Trouble to Score runs against Sri Lanka in 2nd ODI Due to Jeffrey Vandersay Who take 6 wickets Haul at Colombo rsk
Author
First Published Aug 4, 2024, 9:16 PM IST | Last Updated Aug 4, 2024, 9:16 PM IST

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி தற்போது கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் எடுத்தது. இதில், அதிகபட்சமாக அவிஷ்கா ஃபெர்னாண்டோ 40 ரன்களும், கமிந்து மெண்டிஸ் 40 ரன்களும் எடுத்தனர்.

கடைசியில் லவ்லினாவும் தோல்வி – குத்துண்டையில் போட்டியிட்ட அனைவரும் தோல்வி, ஒரு பதக்கம் கூட இல்ல!

பின்னர் கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா அரைசதம் அடித்து அசத்தினார். முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 97 ரன்கள் குவித்தது. இதில், ரோகித் சர்மா 44 பந்துகளில் 4 சிக்ஸர், 5 பவுண்டரி உள்பட 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஸ்வீப் அடிக்க முயற்சித்து ஜெஃப்ரி வாண்டர்சே பந்தில் ஆட்டமிழந்தார்.

அவிஷ்கா ஃபெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ் காம்போவில் இலங்கை 240 ரன்கள் குவிப்பு – தமிழக வீரர் வாஷிக்கு 3 விக்கெட்!

அதன் பிறகு வந்த விராட் கோலி கொஞ்சம் நேரம் அதிரடியாக விளையாடினார். இதற்கிடையில் சுப்மன் கில் 35 ரன்களில் வாண்டர்சே ஓவரில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த ஷிவம் துபேவும் ரன் ஏதும் எடுக்காமல் வாண்டர்சே பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் ஐயர் 7 ரன்னில் எல்பிடபிள்யூ முறையில் வாண்டர்சே ஓவரில் நடையை கட்டினார். அதன் பிறகு வந்த கேஎல் ராகுல் 0 ரன்னில் வாண்டர்சே பந்தில் கிளீன் போல்டானார். தற்போது வரையில் இந்தியா 31 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

TNPL 2024 Final: யார் அந்த சாம்பியன்? முதல் முறையாக அணிக்கு டிராபியை வென்று கொடுப்பாரா ரவிச்சந்திரன் அஸ்வின்?

இலங்கை அணியைப் பொறுத்த வரையில் ஜெஃப்ரி வாண்டர்சே 6 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். 7 ஓவர்கள் வீசிய அவர் 26 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios