Asianet News TamilAsianet News Tamil

கடைசியில் லவ்லினாவும் தோல்வி – குத்துண்டையில் போட்டியிட்ட அனைவரும் தோல்வி, ஒரு பதக்கம் கூட இல்ல!

பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இன்று நடைபெற்ற 9ஆவது நாள் போட்டியான குத்துச்சண்டையில் 75 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோகைன் தோல்வி அடைந்து வெளியேறினார்.

Finally Lovlina Borgohain loss against li Qian in Women's 75 kg quarter Finals Boxing Event at Paris Olympics rsk
Author
First Published Aug 4, 2024, 8:46 PM IST | Last Updated Aug 4, 2024, 8:46 PM IST

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33ஆவது ஒலிம்பிக் தொடர் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற 9ஆவது நாளில் குத்துச்சண்டை போட்டியில் 75 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோகைன் சீனாவின் லி குயானை எதிர்கொண்டார். இந்த போட்டியில் ஆரம்பம் முதலே திணறி வந்த லவ்லினா முதல் சுற்றை 2க்கு 3 என்று இழந்தார். இதே போன்று 2ஆவது சுற்றிலும் 2க்கு 3 என்று லவ்லினா இழந்தார்.

அவிஷ்கா ஃபெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ் காம்போவில் இலங்கை 240 ரன்கள் குவிப்பு – தமிழக வீரர் வாஷிக்கு 3 விக்கெட்!

கடைசியில் 1-4 என்று தோல்வி அடைந்து அரையிறுதி வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறியுள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினா பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறினார். இதன் மூலமாக குத்துச்சண்டை போட்டியில் இந்தியா சார்பில் போட்டியிட்ட ஆண்களுக்கான பிரிவில் அமித் பங்கல், நிஷாந்த் தேவ் இருவரும் வெளியேறினர்.

TNPL 2024 Final: யார் அந்த சாம்பியன்? முதல் முறையாக அணிக்கு டிராபியை வென்று கொடுப்பாரா ரவிச்சந்திரன் அஸ்வின்?

இதே போன்று நிகாத் ஜரீன், ப்ரீதி பவர், ஜைஸ்மின் லம்போரியா மற்றும் லவ்லினா போர்கோகைன் ஆகியோர் மகளிருக்கான குத்துச்சண்டை போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறினர். இதன் மூலமாக ஒட்டு மொத்தமாக குத்துச்சண்டை போட்டியில் இந்தியா பதக்கம் இல்லாமல் வெளியேறி அதிர்ச்சி கொடுத்துள்ளது.

பேட்மிண்டன் அரையிறுதியில் தோல்வி: தங்கப் பதக்க வாய்ப்பை தவறவிட்ட லக்‌ஷயா சென் வெண்கலப் பதக்கத்திற்கு போட்டி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios