19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியின் வீரர் பவன் ஷா, இலங்கைக்கு எதிரான யூத் டெஸ்ட் போட்டியில் 282 ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளார்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணி, அந்நாட்டு ஜூனியர் அணியுடன் யூத் டெஸ்ட் போட்டிகளில் ஆடிவருகிறது. 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் இந்திய ஜூனியர் அணி ஆடிவருகிறது.

இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்துவருகிறது.

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 613 ரன்களை குவித்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இதில், இந்திய அணியின் தொடக்க வீரர் அதர்வா 177 ரன்களை குவித்தார். 3ம் வரிசையில் களமிறங்கிய பவன் ஷா, 33 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 282 ரன்களை குவித்தார்.

19 வயதுக்கு உட்பட்ட அணியில் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது அதிகபட்சமான ஸ்கோர் இதுதான். இந்திய ஜூனியர் அணியில் டெஸ்ட் போட்டிகளில் அதிகபட்சமான ஸ்கோரும் இதுதான். இதற்கு முன் வேறு எந்த இந்திய ஜூனியர் அணியின் வீரரும் ஒரு இன்னிங்ஸில் இத்தனை ரன்கள் குவித்ததில்லை.

19 வயதுக்கு உட்பட்ட வீரர்களில் 1995ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி வீரர் பீக் அடித்த 304 ரன்களே அதிகபட்ச ஸ்கோராக உள்ளது. இரண்டாவது இடத்தில் 1993ம் ஆண்டு இங்கிலாந்து வீரர் டோவ்மன் அடித்த 267 ரன்கள் இருந்தது. தற்போது அதை பின்னுக்கு தள்ளி இந்திய வீரர் பவன் ஷா, 282 ரன்களுடன் இரண்டாமிடத்தை பிடித்துள்ளார்.

Highest innings in U19 Youth Cricket

304* C Peake (AUS) vs Ind 1995
282 Pawan Shah (IND) vs SL today
267 M Dowman (ENG) vs WI 1993
260* K Sharp (ENG )vs WI 1978
254 G Muchail (ENG) vs Ind 2002
— BrokenStats (@Broken_Statz) July 25, 2018

25 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாமிடத்தில் இருந்த வீரரை பின்னுக்கு தள்ளி பவன் ஷா அந்த இடத்தை பிடித்துள்ளார். 282 ரன்களில் பவன் ரன் அவுட்டாகிவிட்டார். இல்லையென்றால், முச்சதம் அடித்து, முதலிடத்தை பிடித்திருப்பார்.