அல்டிமேட் கோ-கோ தொடரில் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிக்கு முதல் தோல்வியை பரிசளித்தது ஒடிசா ஜகர்னட்ஸ் அணி.
அல்டிமேட் கோ-கோ தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சென்னை குயிக் கன்ஸ், குஜராத் ஜெயிண்ட்ஸ், மும்பை கில்லாடிஸ், ஒடிசா ஜகர்னட்ஸ், ராஜஸ்தான் வாரியர்ஸ் மற்றும் தெலுங்கு யோதாஸ் ஆகிய 6 அணிகள் கலந்துகொண்டு ஆடிவரும் இந்த தொடரில் குஜராத், ஒடிசா மற்றும் தெலுங்கு யோதாஸ் ஆகிய 3 அணிகளும் சிறப்பாக ஆடி வெற்றிகளை குவித்துவருகின்றன.
நேற்று நடந்த போட்டியில், தோல்வியை சந்தித்திராத குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி ஒடிசாவை எதிர்கொண்டது. த்ரில்லான இந்த போட்டியில் ஒடிசா அணியின் திலிப் மற்றும் விஷால் ஆகிய இருவரின் அபாரமான ஆட்டத்தால் ஒடிசா அணி 50-47 என்ற ஸ்கோர் கணக்கில் ஒடிசா அணி வெற்றி பெற்றது.
இதையும் படிங்க - Asia Cup 2022: இந்திய அணியை நக்கலடித்த வக்கார் யூனிஸுக்கு தரமான பதிலடி கொடுத்து மூக்கை உடைத்த இர்ஃபான் பதான்
முதல் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்த குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிக்கு முதல் தோல்வியை பரிசளித்தது ஒடிசா அணி.
ஒடிசா வீரர் வாஜிர் சுபாசிஸ் சாண்ட்ரா, 4 வீரர்களை அவுட்டாக்கி 10 புள்ளிகளை பெற்றார். மிலிண்ட்சாவர்க்கார் 7 புள்ளிகளை பெற்று, அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து அபாரமாக ஆடினார்.
இந்த வெற்றியையடுத்து ஒடிசா அணி புள்ளி பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளது. இதுவரை ஆடிய 4 போட்டிகளில் குஜராத், ஒடிசா மற்றும் தெலுங்கு யோதாஸ் ஆகிய அணிகளுமே தலா 3 வெற்றிகளை பெற்றுள்ள நிலையில், குஜராத் அணி முதலிடத்திலும், தெலுங்கு யோதாஸ் அணி 2ம் இடத்திலும், ஒடிசா ஜகர்னட்ஸ் அணி 3ம் இடத்திலும் உள்ளன. சென்னை, மும்பை, ராஜஸ்தான் அணிகள் கடைசி 3 இடங்களில் உள்ளன.
இந்த தொடரில் ஒடிசா வீரர் வாஜிர் தான் 35 புள்ளிகளுடன் அதிக புள்ளிகளை பெற்ற வீரராக திகழ்கிறார். இந்த போட்டியில் 6 புள்ளிகளை பெற்ற குஜராத் ஜெயிண்ட்ஸ் ஆல்ரவுண்டர் அபினந்தன் பாட்டீல், 30 புள்ளிகளை பெற்றிருந்த மும்பை கில்லாடிஸ் வீரர் துர்வேஷை முந்தினார்.
இதையும் படிங்க - சாஹலுடன் மண முறிவா..? கடும் சர்ச்சைக்கு மத்தியில் மௌனம் கலைத்த தனஸ்ரீ வெர்மா
அதேபோல, ராஜஸ்தான் வாரியர்ஸும் தெலுங்கு யோதாஸும் மோதிய மற்றொரு போட்டியில் ராஜஸ்தான் வாரியர்ஸை வீழ்த்தி தெலுங்கு யோதாஸ் அணி வெற்றி பெற்றது. ஒரு வெற்றியை கூட பெற்றிராத ராஜஸ்தான் வாரியர்ஸ் அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
SONY TEN 1 (ஆங்கிலம்), SONY TEN 3 (ஹிந்து, மராத்தி) SONY TEN 4 (தமிழ், தெலுங்கு) ஆகிய சேனல்களிலும், ஓடிடி பிளாட்ஃபார்மான SonyLIV-லும் கோ-கோ போட்டிகளின் நேரலையை காணலாம்.
