These are the teams that have won the national level basketball tournament ...
தேசிய அளவிலான ஆடவர் கூடைப்பந்து போட்டியின் லீக் ஆட்டத்தின் போட்டிகளில் ஏஎஸ்சி பெங்களூர் அணி, இந்தியன் நேவி அணி மற்றும் புதுடெல்லி இந்தியன் இரயில்வே அணிகள் வென்றன.
கரூர் கூடைப்பந்து கழகம் சார்பில் எல்ஆர்ஜி நாயுடு நினைவு சுழற்கோப்பைக்கான 60-ஆம் ஆண்டு தேசியளவிலான ஆடவர் கூடைப்பந்து போட்டி கரூர் மாவட்டம், திருவள்ளுவர் மைதானத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.
ஏ பிரிவில் சென்னை கஸ்டம்ஸ், ஐதராபாத் இன்கம்டாக்ஸ், டெல்லி ஏர்போர்ஸ், புதுடெல்லி இந்தியன் இரயில்வே, பெங்களூர் ஏஎஸ்சி ஆகிய ஐந்து அணிகள், பி பிரிவில் சென்னை ஐசிஎப், டெல்லி இன்கம்டாக்ஸ், பஞ்சாப் போலீஸ், லோனவ்லா இந்தியன் நேவி ஆகிய நான்கு அணிகள் என மொத்தம் ஒன்பது அணிகள் பங்கேற்கின்றன.
லீக் முறையில் நடைபெறும் போட்டியின் 2-ஆவது நாளான நேற்று காலை நடைபெற்ற போட்டியில் ஏஎஸ்சி பெங்களூர் அணி 60-46 என்ற புள்ளிக்கணக்கில் எளிதில் டெல்லி இந்தியன் இரயில்வே அணியைத் தோற்கடித்தது.
இரண்டாவது போட்டியில் இந்தியன் நேவி அணி போராடி பஞ்சாப் போலீஸ் அணியை 66-62 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது.
அதனைத் தொடர்ந்து மாலையில் நடைபெற்ற முதல் போட்டியில் புதுடெல்லி இந்தியன் இரயில்வே அணியும், ஐதராபாத் இன்கம்டாக்ஸ் அணியும் மோதின.
இதில், புதுடெல்லி இந்தியன் இரயில்வே அணி போராடி 78-71 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது.
