The last T20 match between India and Australia has been canceled.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டி 20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தியா வந்த ஆஸ்திரேலியா 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதல் இரண்டு போட்டியின் முடிவில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று சம நிலை வகித்தது.

இந்நிலையில், கடைசி டி.20 போட்டி இன்று ஐதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற இருந்தது. 

போட்டி நடக்க இருந்த மைதானத்தில் நேற்று அதிகமான மழை பெய்தது. இதையடுத்து போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும் பிட்சில் தொடர்ந்து ஈரப்பதம் இருந்ததால் போட்டி கைவிடப்பட்டது.

இதனிடையே இந்திய அணி வீரர்கள் வித்தியாசமான பயிற்சி மேற்கொண்டனர். வழக்கமாக வலது கை பேட்ஸ்மேன்கள் அனைவரும், இடது கை பேட்ஸ்மேன்களாக பேட்டிங் செய்தனர்.

இதில் தற்போதைய கேப்டன் விராட் கோலி, துணைக்கேப்டன் ரோகித் சர்மா முன்னாள் கேப்டன் தோனியும் இணைந்து கொண்டனர்.