- Home
- Sports
- Sports Cricket
- IND vs NZ: கடைசி நேரத்தில் அதிரடி வீரர் விலகல்.. இந்திய அணிக்கு பின்னடைவு.. அட! மாற்று வீரர் இவரா?
IND vs NZ: கடைசி நேரத்தில் அதிரடி வீரர் விலகல்.. இந்திய அணிக்கு பின்னடைவு.. அட! மாற்று வீரர் இவரா?
இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடிகிறது. முதலாவது ஒருநாள் போட்டி வதோதராவில் இன்று நடந்து வருகிறது.

இந்தியா vs நியூசிலாந்து ஓடிஐ தொடர்
இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பண்ட் பக்கவாட்டு தசைப்பிடிப்பு காரணமாக இந்தியா vs நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார். ரிஷப் பண்ட்டுக்கு பதில் மாற்று வீரராக துருவ் ஜுரல் அறிவிக்கப்பட்டுள்ளார்.
வதோதராவில் உள்ள பிசிஏ மைதானத்தில் சனிக்கிழமை வலைப் பயிற்சியின் போது பேட்டிங் செய்தபோது பண்ட்டுக்கு காயம் ஏற்பட்டது என்று பிசிசிஐ வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிஷப் பண்ட் விலகல்
வலைப் பயிற்சியில் பேட்டிங் செய்தபோது பண்ட்டுக்கு திடீரென அசௌகரியம் ஏற்பட்டது, உடனடியாக அவர் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க அழைத்துச் செல்லப்பட்டார். நிபுணர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, பந்த்துக்கு பக்கவாட்டு தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளதை பிசிசிஐ மருத்துவக் குழு உறுதி செய்தது.
இதன் விளைவாக, அவர் தொடரில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். ரிஷப் பண்ட்டின் மாற்று வீரராக அறிவிக்கப்பட்ட ஜுரல், தற்போது இந்திய அணியில் இணைந்துள்ளார்.
ஓடிஐ தொடருக்கான இந்திய அணி
இந்தியாவின் புதுப்பிக்கப்பட்ட ஒருநாள் அணி: சுப்மன் கில் (கேப்டன்), ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல். ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், நிதிஷ் குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜுரல்
நியூசிலாந்து வலுவான தொடக்கம்
இந்தியா vs நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி வதோதராவில் உள்ள கோடம்பியில் உள்ள பிசிஏ மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்யும் நியூசிலாந்து அணி இப்போது வரை 25 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 134 ரன்கள் எடுத்துள்ளது. ஹென்றி நிக்கோலஸ் 69 பந்தில் 8 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். டெவான் கான்வே 56 ரன்னில் போல்டானார். ஹர்சித் ராணா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

