- Home
- Sports
- Sports Cricket
- நியூசிலாந்து தொடரில் இருந்து இந்திய அணியின் சிக்சர் மன்னன் விலகல்! ரசிகர்கள் ஷாக்!
நியூசிலாந்து தொடரில் இருந்து இந்திய அணியின் சிக்சர் மன்னன் விலகல்! ரசிகர்கள் ஷாக்!
India vs new zealand Series: நியூசிலாந்து தொடரில் இருந்து இந்திய அணியின் சிக்சர் மன்னன் விலககியுள்ளார். இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

திலக் வர்மா விலகல்
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஓடிஐ தொடரிலும், 5 டி20 தொடரிலும் விளையாட உள்ளது. ஜனவரி 11ம் தேதி ஒருநாள் தொடர் தொடங்குகிறது. டி20 தொடர் ஜனவரி 21 ஆம் தேதி தொடங்கும். இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான முதல் மூன்று டி20 போட்டிகளில் இருந்து இந்தியாவின் ஸ்டார் அதிரடி வீரர் திலக் வர்மா விலகியுள்ளார். அவருக்கு ராஜ்கோட்டில் வயிற்றுப் பிரச்சனைக்காக வர்மாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
திலக் வர்மா விலகல் ஏன்?
திலக் வர்மா இந்தியாவின் டி20 அணியில் மட்டுமே இடம்பெற்றுள்ளார். இன்று காலை அவர் மருத்துவமனையில் இருந்து வர்மா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். நாளை ஹைதராபாத் திரும்ப உள்ளார்.
அவர் தற்போது சீராகவும், நல்ல முன்னேற்றத்துடனும் இருக்கிறார். அவரது அறிகுறிகள் முழுமையாகத் தீர்ந்து, காயம் திருப்திகரமாக ஆறியவுடன், வர்மா மீண்டும் உடற்பயிற்சியைத் தொடங்கி, படிப்படியாக திறன் சார்ந்த நடவடிக்கைகளுக்குத் திரும்புவார்.
இந்திய அணியின் ஸ்டார் வீரர்
நியூசிலாந்துக்கு எதிரான மீதமுள்ள இரண்டு டி20 போட்டிகளில் திலக் வர்மா பங்கேற்பது, பயிற்சி மற்றும் திறன் நிலைகளுக்குத் திரும்பும் போது அவரது முன்னேற்றத்தின் அடிப்படையில் மதிப்பிடப்படும்.
கடந்த ஆண்டில் இந்திய டி20 அணியில் வர்மா ஒரு முக்கிய பேட்டராக இருந்து வருகிறார். இந்திய அணியின் ஆசிய கோப்பை 2025 வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஆட்டமிழக்காமல் 69* ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார்.
டி20 உலக்கோப்பைக்கு முக்கியமான தொடர்
திலக் வர்மா வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக தனது டி20 அறிமுகத்தை மேற்கொண்டார். அப்போதிருந்து, அவர் 40 போட்டிகள் மற்றும் 37 இன்னிங்ஸ்களில் விளையாடி, 49.29 என்ற அற்புதமான சராசரியுடன் 144.09 ஸ்ட்ரைக் ரேட்டில் 1183 ரன்கள் குவித்துள்ளார். இவர் இரண்டு சதங்கள் மற்றும் ஆறு அரை சதங்களை அடித்துள்ளார்.
நாக்பூர், ராய்ப்பூர், கவுகாத்தி, விசாகப்பட்டினம் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே ஐந்து டி20 போட்டிகள் நடைபெற உள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த டி20 தொடர், இந்தியாவிலும் இலங்கையிலும் நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026-க்குத் தயாராவதற்கு உதவும்.

