- Home
- Sports
- Sports Cricket
- இந்தியா vs நியூசிலாந்து ஓடிஐ, டி20 தொடரை எந்த டிவியில் பார்க்கலாம்? போட்டிகள் தொடங்கும் நேரம்?
இந்தியா vs நியூசிலாந்து ஓடிஐ, டி20 தொடரை எந்த டிவியில் பார்க்கலாம்? போட்டிகள் தொடங்கும் நேரம்?
இந்தியா vs நியூசிலாந்து இடையிலான ஓடிஐ மற்றும் டி20 தொடரை எந்த டிவியில் பார்க்கலாம்? போட்டிகள் தொடங்கம் நேரம் என்ன? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

இந்தியா vs நியூசிலாந்து ஓடிஐ தொடர்
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாட உள்ளன.
இந்தியா, நியூசிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி வதோதராவில் ஜனவரி 11ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இரண்டாவது ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் ஜனவரி 14ம் தேதியும் (புதன்கிழமை), 3வது போட்டி இந்தூரில் ஜனவரி 18ம் தேதியும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளன.
இந்தியா, நியூசிலாந்து டி20 தொடர்
இதேபோல் முதல் டி20 போட்டி நாக்பூரில் ஜனவரி 21ம் தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது. 2வது டி20 ஜனவரி 23ம் தேதி (வெள்ளிக்கிழமை) ராய்ப்பூரிலும், 3வது போட்டி ஜனவரி 25ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கவுகாத்தியிலும், 4வது போட்டி ஜனவரி 28ம் தேதி (புதன்கிழமை) விசாகப்பட்டினத்திலும், 5வது போட்டி ஜனவரி 31ம் தேதி (சனிக்கிழமை) திருவனந்தபுரத்திலும் நடைபெற உள்ளன.
எந்த டிவியில் பார்க்கலாம்? போட்டிகள் தொடங்கும் நேரம்?
இந்தியா,நியூசிலாந்து ஓடிஐ மற்றும் டி20 தொடரை எந்த டிவியில் பார்க்கலாம்?
இந்தியா, நியூசிலாந்து ஓடிஐ மற்றும் டி20 தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும சேனல்களில் நேரடியாக பார்க்கலாம். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் தமிழ் வர்னணையுடன் போட்டிகளை கண்டு ரசிக்கலாம்.
இந்தியா, நியூசிலாந்து ஓடிஐ மற்றும் டி20 தொடரை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
இந்தியா, நியூசிலாந்து ஓடிஐ மற்றும் டி20 தொடரை ஜியோ சினிமா அல்லது டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் பார்த்து ரசிக்கலாம்.
இந்தியா, நியூசிலாந்து ஓடிஐ மற்றும் டி20 தொடர் தொடங்கும் நேரம் என்ன?
இந்தியா, நியூசிலாந்து இடையிலான ஓடிஐ தொடரின் அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்கும். இந்தியா, நியூசிலாந்து இடையிலான டி20 தொடரின் அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கும்.
ஓடிஐ, டி20 இந்திய அணி வீரர்கள் லிஸ்ட்
நியூசிலாந்து ஓடிஐ தொடருக்கான இந்திய அணி: சுப்மன் கில் (கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), ரோகித் சர்மா, விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா மற்றும் குல்தீப் யாதவ்.
நியூசிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அக்சர் படேல் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ் மற்றும் வருண் சக்ரவர்த்தி

