- Home
- Sports
- Sports Cricket
- IND vs NZ 1st ODI: மரண காட்டு காட்டிய விராட் கோலி..! இமாலய இலக்கை ஊதித்தள்ளிய இந்தியா..
IND vs NZ 1st ODI: மரண காட்டு காட்டிய விராட் கோலி..! இமாலய இலக்கை ஊதித்தள்ளிய இந்தியா..
India vs New Zealand 1st ODI: வதோதராவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. விராட் கோலியின் அதிரடி பேட்டிங் நியூசிலாந்தை திணறடித்தது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி தற்போது 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

ரசிகர்களுக்கு விருந்து படைத்த பேட்ஸ்மேன்கள்
இந்தியா, நியூசிலாந்து இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி வதோதரா மைதானத்தில் நேற்று நடைபெற்ற நிலையில், இரு அணி வீரர்களும் பேட்டிங்கில் மிரட்டியதால் இந்த போட்டி ரசிகர்களுக்கு மெகா விருந்தாக அமைந்தது. மேலும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நியூசி பந்துவீச்சாளர்கள் கடுமையான நெருக்கடி கொடுத்த போதிலும் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி போட்டியைக் வென்றனர்.
டாஸ் வென்ற இந்தியா
வதோதரா மைதானத்தில் நடந்த இப்போட்டியில், இந்திய கேப்டன் சுப்மன் கில் டாஸ் வென்று நியூசிலாந்தை பேட்டிங் செய்ய அழைத்தார். அதன் அடிப்படையில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில், ஹென்றி நிக்கோல்ஸ் மற்றும் டெவோன் கான்வே முதல் விக்கெட்டுக்கு 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வலுவான தொடக்கத்தை அளித்தனர்.
300 ரன்கள் குவித்த நியூசி..
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் எடுத்தது. டேரில் மிட்செல் 84 ரன்களும், ஹென்றி நிக்கோல்ஸ் 62 ரன்களும், டெவோன் கான்வே 56 ரன்களும் எடுத்து அணிக்கு வலுவான ஸ்கோரை அமைத்துக் கொடுத்தனர்.
மரண காட்டு காட்டிய கோலி
301 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோஹித் மற்றும் கில் நல்ல தொடக்கத்தை உருவாக்கிக் கொடுத்தனர். ரோஹித் 26 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் அவரைத் தொடர்ந்து. களமிறங்கிய கிங் விராட் கோலி, கில்லுடன் இணைந்து அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தத் தொடங்கினார்.
வரலாறு படைத்த விராட்
கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 28,000 ரன்களை கடந்தார். சங்கக்காராவின் சாதனையை முறியடித்தார். 91 பந்துகளில் 8 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 93 ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
ராகுல் மாஸ் ஃபினிஷிங்
கோலி, ஜடேஜா, ஷ்ரேயாஸ் அவுட் ஆனதால் போட்டி திடீரென நியூசிலாந்து அணிக்கு சாதகமாக மாறியது. ஆட்டத்தின் போக்கை புரிந்து கொண்ட இந்திய வீரர் ஹர்ஷித் ராணா 29 ரன்கள் எடுத்து ஆட்டத்தை மாற்றினார். இறுதியில், கே.எல். ராகுலின் அனுபவம் இந்திய அணியின் வெற்றிக்கு உதவியது. இறுதியில் 4 பந்துகள் மீதமிருந்த நிலையில் சிக்சர் அடித்து ராகுல் போட்டியை முடித்து வைத்தார்.

