State-level karate competition Namakkal team champion Trichy Salem took up the successive places ...
மாநில அளவிலான கராத்தே போட்டி; நாமக்கல் அணி சாம்பியன்; திருச்சி, சேலம் அடுத்தடுத்த இடங்களை பிடித்தன...
மாநில அளவிலான கராத்தே போட்டியில் நாமக்கல் மாவட்ட அணி முதலிடத்தையும், திருச்சி அணி இரண்டாம் இடத்தையும், சேலம் அணி மூன்றாம் இடத்தையும் பிடித்தன.
சோட்டோ, சோட்டோகான் கராத்தே சங்கம் சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டி நாமக்கல்லில் நடைபெற்றது.
நேற்று நடைப்பெற்ற இந்தப் போட்டியில் நாமக்கல், சேலம், கரூர், ஈரோடு, திருச்சி, மதுரை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 650 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்தப் போட்டியில் வயது மற்றும் பெல்ட் அடிப்படையில் தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டியின் நிறைவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை நாமக்கல் சோட்டோகான் சங்கமும், 2-ஆம் இடத்தை திருச்சி வாசுதேவன் தலைமையிலான சிட்டிரியூ சங்கமும், 3-ஆம் இடத்தை சேலம் குப்புராஜ் தலைமையிலான சோட்டோகான் கராத்தே சங்கமும் பெற்றன.
இந்தப் போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் வரும் மே மாதம் இலங்கையில் நடைபெற உள்ள தெற்காசிய கராத்தே போட்டிகளில் கலந்துகொள்ள தகுதிப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களுக்கான பரிசு வழங்கும் நிகழ்ச்சியில், இலங்கை, மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டிகளில் வெற்றி பெற்ற பூஜா, நரேஷ், காவ்யா, மகேஸ்வரி, தாரணி ஆகியோரை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.
இந்தப் போட்டியை, கராத்தே சங்கத்தின் தலைமைப் பயிற்சியாளர் சென்சி உமாகாந்தன் தொடக்கி வைத்தார்.
கராத்தே பயிற்சியாளர்கள் குப்புராஜ், வாசுதேவன், சுரேஷ், தண்டபானி, ஹரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
