srilanka historical defeat in test cricket

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி இன்று அடைந்த தோல்விதான், டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கையின் மிக மோசமான தோல்வி.

இந்தியா-இலங்கை இடையே நாக்பூரில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி தோல்வியைத் தழுவியது. 

இலங்கை அணியின் மிக மோசமான டெஸ்ட் தோல்வி இதுதான். இதற்கு முன்னதாக தென் ஆப்பிரிக்காவுன் கடந்த 2001ல் நடந்த டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 229 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை தோற்றதுதான், அந்த அணியின் படுமோசமான தோல்வியாக இருந்தது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 1993-ம் ஆண்டு, இன்னிங்ஸ் மற்றும் 208 ரன்கள் வித்தியாசத்திலும் இலங்கை அணி தோல்வியடைந்திருக்கிறது.

இந்தியாவுக்கு எதிரான இன்றைய தோல்வி, அவற்றையெல்லாம் மிஞ்சியது. எனவே இலங்கை அணியின் படு மோசமான தோல்வியாக இந்த தோல்வி அமைந்தது.

அதே நேரத்தில், இந்தியாவின் சிறந்த டெஸ்ட் வெற்றியாக இந்த வெற்றி அமைந்துள்ளது. கடந்த 2007-ல் வங்கதேசத்தை இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியுள்ளது. இலங்கைக்கு எதிராக இன்றும், அதேபோல இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.