Srikanth progress at the International Badminton Rankings ...
சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையின் ஆடவர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 4-வது இடத்திற்கு முன்னேரியுள்ளார். இதற்கு முன்னர் அவர் ஐந்தவது இடத்தில் இருந்தார்.
காயம் காரணமாக சீன ஓபன், ஹாங்காங் ஓபன் போட்டிகளை தவிர்த்த ஸ்ரீகாந்த், அடுத்த வாரம் நடைபெறவுள்ள துபை சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் இந்திய இளம் வீரரான லக்ஷயா சென் 19 இடங்கள் முன்னேறி 89-வது இடத்துக்கு வந்துள்ளார்.
இந்த சீசனில் நடைபெற்ற சர்வதேச போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதை அடுத்து லக்ஷயா இத்தகைய முன்னேற்றத்தை அடைந்துள்ளார்.
யுராஸியா பல்கேரிய ஓபன், இந்திய சர்வதேச சீரிஸ் ஆகிய பட்டங்களை கைப்பற்றிய லக்ஷயா சென், டாடா ஓபன் இந்தியா சர்வதேச போட்டியில் இறுதிச்சுற்று வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இதர இந்திய வீரர்களான ஹெச்.எஸ்.பிரணாய், சாய் பிரணீத் ஆகியோர் முறையே 10 மற்றும் 17-வது இடங்களில் நீடிக்கின்றனர்.
சர்வதேச தரவரிசையின் மகளிர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து தனது 3-வது இடத்திலும், சாய்னா நெவால் 10-வது இடத்திலும் உள்ளனர்.
இளம் வீராங்கனை ரிதுபர்னா தாஸ் மூன்று இடங்கள் முன்னேறி 49-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
அதேபோன்று கலப்பு இரட்டையர் பிரிவில் பிரணவ் ஜெர்ரி சோப்ரா - சிக்கி ரெட்டி இணை 19-வது இடத்தில் தொடர்கின்றனர்.
