Southern Railway Madras Sporting Union team saw the term
சென்னை லீக் சீனியர் டிவிஷன் கால்பந்து போட்டியில் தெற்கு ரயில்வே அணியை 5-2 என்ற கோல் கணக்கில் மெட்ராஸ் ஸ்போர்ட்டிங் யூனியன் அணி பதம் பார்த்து வெற்றி பெற்றது.
செயின்ட் ஜோசப் குழுமம் - சென்னை கால்பந்து சங்கம் இணைந்து சென்னை லீக் கால்பந்து போட்டி சென்னை ஜவாஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற சீனியர் டிவிஷன் லீக் ஆட்டத்தில் மெட்ராஸ் ஸ்போர்ட்டிங் யூனியன் அணியும், தெற்கு ரயில்வே அணியும் மோதின.
இதில், 5-2 என்ற கோல் கணக்கில் தெற்கு ரயில்வே அணியை வீழ்த்தி மெட்ராஸ் ஸ்போர்ட்டிங் அணி வெற்றி பெற்றது.
ஸ்போர்ட்டிங் யூனியன் தரப்பில் ரங்ஸிங் மூன்று கோல்களை அடித்து ஹாட்ரிக் கொடுத்தார்.
மேலும், மதன், அண்ணாமலை ஆகியோர் தலா ஒரு கோலடித்தனர்.
தெற்கு ரயில்வே தரப்பில் ராஜேஷ், ரிஜு ஆகியோர் தலா ஒரு கோலடித்தனர்.
சென்னை சிட்டி அணியும், இந்தியன் வங்கி அணியும் இன்று மாலை நடைபெறும் ஆட்டத்தில் மோதுகின்றன.
