Skating last Test match for India Why
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி சேர்க்கப்படாததால் இந்தியாவுக்கு சற்று சறுக்கல்இருக்கும்.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி காயத்திலிருந்து மீண்டு வருவதால், தர்மசாலா டெஸ்ட் போட்டியில் சேர்த்துக் கொள்ளப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்திய அணியின் முடநீக்கியல் நிபுணரான பேட்ரிக் ஃப்ரஹாட்டின் கண்காணிப்பின் கீழ் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
முகமது சமி, ராஞ்சி டெஸ்ட் போட்டியில் கூட அணியில் இருந்தார். ஆனால், கடைசி டெஸ்ட் போட்டிக்கான 15 பேர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை.
வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான தர்மசாலா மைதானத்தில் நடைபெறும் இந்த டெஸ்ட் போட்டியில் முகமது சமி இல்லாதது, இந்திய அணிக்கு சறுக்கலைத் தரலாம்.
