PV sindhu severe beating after the battle Naomi

சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து கடுமையான போராட்டத்திற்கு பிறகு நகோமியை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் இந்தியாவின் சிந்து கடும் போராட்டத்துக்குப் பிறகு 10-21, 21-15, 22-20 என்ற செட் கணக்கில் ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை வீழ்த்தினார்.

போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருக்கும் சிந்து தனது 2-ஆவது சுற்றில் இந்தோனேசியாவின் ஃபிட்ரியானியுடன் மோதுகிறார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாய் பிரணீத் 17-21, 21-7, 21-19 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் எமில் ஹோல்ஸ்டை தோற்கடித்தார்.

இரண்டாவது சுற்றில் சீனாவின் கியாவ் பின்னை எதிர்கொள்கிறார் சாய் பிரணீத்.

மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா - சிக்கி ரெட்டி ஜோடி 21-19, 21-19 என்ற நேர் செட்களில் மலேசியாவின் இயின் லூ லிம் - யாப் செங் வென் ஜோடியை வீழ்த்தி அசத்தியது.