ஆஸ்திரேலிய வீரர் ஷான் மார்ஷ் படுமோசமான ஷாட் செலக்‌ஷனால் போல்டாகி தேவையில்லாமல் விக்கெட்டை பறிகொடுத்தார். 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, புஜாராவின் பொறுப்பான சதத்தால் 250 ரன்களை குவித்தது. 

இதையடுத்து இரண்டாம் நாளான இன்று ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. ஃபின்ச் மற்றும் அறிமுக வீரர் மார்கஸ் ஹாரிஸ் களமிறங்கினர். முதல் ஓவரை வீசிய இஷாந்த் சர்மா, மூன்றாவது பந்திலேயே ஃபின்ச்சை கிளீன் போல்டாக்கி வெளியேற்றினார். ஃபின்ச் டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். 

பின்னர் மார்கஸ் ஹாரிஸுடன் ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் உஸ்மான் கவாஜா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி முடிந்தவரை விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் ஆட முயன்றது. ஆனால் அஷ்வின் அந்த ஜோடியை பிரித்தார். மார்க்ஸ் ஹாரிஸை 26 ரன்களில் வெளியேற்றிய அஷ்வின், ஷான் மார்ஷை 2 ரன்னில் கிளீன் போல்டாக்கி அனுப்பினார். அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரம் உஸ்மான் கவாஜாவையும் 28 ரன்களில் அஷ்வின் வெளியேற்றினார். 

களத்தில் நிலைத்து நின்ற கவாஜாவின் விக்கெட் மிக முக்கியமானது. அவரை நிலைத்து நிற்க விடுவது நல்லதல்ல. நல்ல வேளையாக அவரது விக்கெட்டை வீழ்த்தினார். 4 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி ஆடிவருகிறது. டிராவிஸ் ஹெட்டும் ஹேண்ட்ஸ்கோம்பும் ஆடிவருகின்றனர். 

இந்த விக்கெட்டுகளில் ஷான் மார்ஷ் அவுட்டான விதம் தான் மிகவும் மோசம். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே அஷ்வின் வீசிய பந்தை மோசமாக டிரைவ் ஆடியதால் போல்டாகி வெளியேறினார். அண்மைக்காலமாகவே ஃபார்மில் இல்லாமல் சொதப்பிவரும் ஷான் மார்ஷ் இன்று அவுட்டாகிய விதம் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருந்தது. டெஸ்ட் போட்டிகளில் இதுபோன்ற மிகவும் அலட்சியமாக விக்கெட்டை பறிகொடுப்பது வருந்தத்தக்க விஷயம். ஸ்டம்புக்கு சம்மந்தமே இல்லாமல் சென்ற பந்தை மோசமான ஷாட்டால் ஸ்டம்புக்கு விட்டு மிகவும் எளிதாக தனது விக்கெட்டை விட்டுக்கொடுத்தார் ஷான் மார்ஷ். ஷான் மார்ஷ் போல்டான வீடியோ இதோ..