கிரிக்கெட் விளையாட்டை வளர்க்க வேண்டுமென்றா, இந்திய வீரர்கள் ஐபிஎல் போட்டியை தவிர்த்து மற்ற நாட்டு லீக் போட்டிகளிலும் ஆட பிசிசிஐ அனுமதிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி வலியுறுத்தியுள்ளார். 

இந்தியாவில் பிசிசிஐ சார்பில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஐபிஎல் தொடரில் அனைத்து நாட்டு கிரிக்கெட் வீரர்களும் கலந்துகொண்டு ஆடுகின்றனர். ஆனால் இந்திய வீரர்கள், இங்கிலாந்தில் நடத்தப்படும் கவுண்டி போட்டிகளில் மட்டுமே ஆடிவருகின்றனர். அதைத்தவிர மற்ற எந்த நாட்டில் நடத்தப்படும் லீக் தொடரிலும் ஆட பிசிசிஐ அனுமதிப்பதில்லை. இதற்கான தெளிவான விளக்கத்தையும் இதுவரை பிசிசிஐ அளிக்கவில்லை. 

இந்திய வீரர் யூசுப் பதான் உள்ளிட்ட சில வீரர்கள் ஹாங்காங் லீக், கரீபியன் லீக், ஆஸ்திரேலியன் லீக் ஆகிய தொடர்களில் ஆட அனுமதி கேட்டபோது, தடையில்லா சான்று வழங்க பிசிசிஐ மறுத்துவிட்டது. ஆனால் மற்ற நாட்டு வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் ஆட பிசிசிஐ அனுமதிக்கிறது. இது சர்ச்சைக்குரிய விஷயமாகவே உள்ளது. 


 
இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி, லீக் போட்டிகளை நடத்தும் நாடுகள், கிரிக்கெட்டை ஆதிரிக்கின்றன என்றுதான் அர்த்தம். அந்த வகையில் கிரிக்கெட்டை வளர்க்க வேண்டுமென்றால் எல்லா நாட்டு வீரர்களும் எல்லா நாட்டு லீக் போட்டிகளிலும் ஆட அனுமதிக்கப்பட வேண்டும். மற்ற நாட்டு வீரர்கள் அனைத்து லீக்குகளிலும் விளையாட அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், இந்தியாவில் உள்ள வீரர்கள் மட்டும் ஐபிஎல் தவிர்த்து எந்த நாட்டு லீக் போட்டிகளிலும் விளையாட அந்நாட்டு வாரியம் அனுமதிக்கப்படுவது இல்லை. இது தவிர்க்கப்பட வேண்டும். இந்திய வீரர்களும் மற்ற நாட்டு லீக் போட்டிகளில் விளையாட அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் நட்பு நாடுகளிலும் கிரிக்கெட்போட்டி வளரும் என அஃப்ரிடி தெரிவித்தார். 

அஃப்ரிடி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட போதும்  14 வகையான அணிகளில் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார்.