serena wiliams resigns
இண்டியன்வெல்ஸ் மாஸ்டர்ஸ் மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெறவுள்ள மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டிகளிலிருந்து முழங்கால் காயம் காரணமாக விலகுவதாக அறிவித்துள்ளார் செரீனா வில்லியம்ஸ்.
இது தொடர்பாக இண்டியன்வெல்ஸ் மாஸ்டர்ஸ் போட்டி ஏற்பாட்டாளர்கள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் உலகின் முதல் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் கூறியிருப்பது:
“இண்டியன்வெல்ஸ் மற்றும் மியாமி மாஸ்டர்ஸ் போட்டிகளில் விளையாட முடியாமல் விலகுவது வருத்தமளிக்கிறது.
முழங்காலில் ஏற்பட்டுள்ள பிரச்னை காரணமாக என்னால் பங்கேற்க இயலவில்லை. இது மிகுந்த ஏமாற்றமளிப்பதாக உள்ளது.
காயத்திலிருந்து மீண்டு விரைவில் டென்னிஸுக்கு திரும்புவதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
செரீனா விலகியிருப்பதால், உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர், இண்டியன்வெல்ஸ் போட்டியின் முடிவில் 2-ஆவது இடத்தைப் பிடிக்க வாய்ப்புகள் அதிகம்.
