மெல்போர்னில் நடந்து வரும் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா, குரோஷியாவின் இவான் டோடிக் ஜோடி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.
இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியானா அஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இறுதிக்கட்டத்தை கிராண்ட்ஸ்லாம் தொடர் எட்டியுள்ளதால், பரபரப்பு தொற்றியுள்ளது.
இந்தியாவின் சார்பில் பங்கேற்ற ரோகன் போபண்ணா, லியான்டர் பயஸ், திவிஜ் சரண், ஜீல் தேசாய், சித்தாந்த் பாந்தியா ஆகியோர் விரைவாகவே வெளியேறி விட்டனர்.

ஆனால், மகளிர் பிரிவில் இந்தியாவின் இளம் வீராங்கனை சானியா மிர்சா தொடர்ந்து வெற்றி நடை போட்டு வருகிறார்.
கலப்பு இரட்டையர் பிரிவில் இன்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில், ஆஸ்திரேலிய இணையான சமந்தா ஸ்டோசர், சாம் குரோத் ஆகியோரை எதிர்த்து
குரோஷிய வீரர், இவான் டோடிக், இந்தியாவின் சானியா மிர்சா இணை களம் இறங்கினர்.

ஒரு மணி நேரம் 18 நிமிடங்கள் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் சமந்தா ஸ்டோசர், சாம் குரோத் இணையை 6-5, 2-6, 10-5 என்ற நேர் செட்களில் சானியா, இவான் டோடிக் இணை தோற்கடித்து பைனலுக்கு முன்னேறினர்.
இதுவரை கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா 3 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார். கடந்த 2014ம் ஆண்டு யு.எஸ். ஓபனே பிரேசில் வீரர் புருனோஸ் சோரசுடன் சேர்ந்து விளையாடி வென்றார்.
மகளிர் இரட்டையர்பிரிவில் சானியா இதுவரை 2016-ல் ஆஸ்திரேலியன் ஓபன், 2015-ல் விம்பிள்டன், யு.எஸ். பட்டத்தைக் கைப்பற்றினார்.

கலப்பு இரட்டையர்பிரிவில் 2009-ல் ஆஸ்திரேலியன் ஓபன், 2012-ல் ஆஸ்தேரேலியன் ஓபன், 2014-ல் யு.எஸ். ஓபன் ஆகிய பட்டங்களை கைப்பற்றி இருந்தார்.
இந்நிலையில், இந்த முறை ஆஸ்திரேலியன் ஓபன் பட்டத்தை சானியா, டோடிக் இணை வெல்லும் பட்சத்தில் சானியா வெல்லும் 7-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
