சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்ஸா - செக்.குடியரசின் பர்போரா ஸ்டிரைகோவா ஜோடி அரையிறுதியில் கால் பதித்துள்ளனர்.

சிட்னியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் சானியா - பர்போரா ஜோடி தங்களின் காலிறுதியில் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வைல்ட்கார்டு ஜோடியான அமெரிக்காவின் மேடிசன் பிரெங்லே - ரஷியாவின் அரினா ரொடினோவா ஜோடியைத் தோற்கடித்தது.

சானியா - பர்போரா ஜோடி தங்களின் அரையிறுதியில் அமெரிக்காவின் வானியா கிங் - கஜகஸ்தானின் யாரோஸ்லாவா ஷ்வேடோவா ஜோடியைச் சந்திக்கின்றனர்.