MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • IPL பைனல் பெங்களூருவில் நடக்காது.... பிளே ஆஃப் அட்டவணையில் பிசிசிஐ வைத்த ட்விஸ்ட்

IPL பைனல் பெங்களூருவில் நடக்காது.... பிளே ஆஃப் அட்டவணையில் பிசிசிஐ வைத்த ட்விஸ்ட்

IPL Playoffs Schedule : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) புதன்கிழமை அன்று இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2026 தொடரின் ப்ளேஆஃப்ஸ் போட்டிகளுக்கான அட்டவணையை அறிவித்துள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : May 06 2026, 03:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
IPL Final Match Venue Changed
Image Credit : Getty

IPL Final Match Venue Changed

விறுவிறுப்பாக நடந்த வரும் ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 70 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், தொடர் இப்போது முக்கியமான கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. இந்த முறை புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடித்து ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற கிட்டத்தட்ட 6 அணிகள் போட்டிபோட்டு வருகின்றன. இதில் பஞ்சாப், ஐதராபாத், ராஜஸ்தான், பெங்களூரு, குஜராஜ் ஆகிய அணிகள் ஆறு வெற்றிக்ளை பெற்றுள்ளன. இவர்களுக்கு அடுத்தபடியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 வெற்றிகளுடன் 6ம் இடத்தில் உள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
ஐபிஎல் ப்ளே ஆஃப் அட்டவணை
Image Credit : stockPhoto

ஐபிஎல் ப்ளே ஆஃப் அட்டவணை

ஐபிஎல் தொடரின் ப்ளே ஆஃப் சுற்றுகளுக்கான போட்டிகள் எங்கு நடக்கும் என்பதை சஸ்பென்ஸாக வைத்திருந்த பிசிசிஐ தற்போது அதற்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு இடையேயான குவாலிஃபையர் 1 போட்டி, மே 26 அன்று தரம்சாலாவில் உள்ள HPCA ஸ்டேடியத்தில் நடைபெறும். இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

Related Articles

Related image1
Vaibhav Suryavanshi: ஐபிஎல் போட்டியில் புதிய சாதனை! மேக்ஸ்வெல் ரெக்கார்டு ஊதி தள்ளிய 15 வயதான இளம் வீரர் வைபவ்!
Related image2
Now Playing
ஐபிஎல் 2026 | சிங்க நடை போடும் விராட்.! சரித்திரம் படைத்த கோலி.! புதிய வரலாறு படைத்த ஆர்சிபி நாயகன்!
34
ஐபிஎல் பைனல் எங்கே நடைபெறும்?
Image Credit : stockPhoto

ஐபிஎல் பைனல் எங்கே நடைபெறும்?

அதன்பிறகு, சண்டிகரில் உள்ள புதிய சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில், மே 27 அன்று எலிமினேட்டர் போட்டி நடைபெறும். இதில் புள்ளிப் பட்டியலில் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் உள்ள அணிகள் மோதும். குவாலிஃபையர் 2 போட்டி, மே 29 அன்று அதே சண்டிகர் மைதானத்தில் நடைபெறும். இதில், குவாலிஃபையர் 1-ல் தோல்வியடைந்த அணியும், எலிமினேட்டரில் வெற்றி பெற்ற அணியும் இறுதிப் போட்டிக்கான இரண்டாவது இடத்திற்கு போட்டியிடும்.

இந்த சீசனின் இறுதிப் போட்டி, மே 31 அன்று உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும். இதனால், இறுதிப் போட்டி மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில நிர்வாக மற்றும் தளவாட காரணங்களுக்காக, இந்த முறை ப்ளேஆஃப்ஸ் போட்டிகள் மூன்றும் வெவ்வேறு மைதானங்களில் ஒரு சிறப்பு நிகழ்வாக நடத்தப்படுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

44
பெங்களூருவில் நடத்தப்படாதது ஏன்?
Image Credit : ANI

பெங்களூருவில் நடத்தப்படாதது ஏன்?

முதலில் இறுதிப் போட்டி பெங்களூருவில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், உள்ளூர் கிரிக்கெட் சங்கம் மற்றும் அதிகாரிகளின் சில கோரிக்கைகள், பிசிசிஐ-யின் வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகளுக்கு அப்பாற்பட்டதாக இருந்ததால், இறுதிப் போட்டி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது என்று பிசிசிஐ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ப்ளேஆஃப்ஸ் அட்டவணை:

குவாலிஃபையர் 1 - மே 26 - HPCA ஸ்டேடியம், தரம்சாலா

எலிமினேட்டர் - மே 27 - புதிய சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம், சண்டிகர்

குவாலிஃபையர் 2 - மே 29 - புதிய சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம், சண்டிகர்

இறுதிப் போட்டி - மே 31 - நரேந்திர மோடி ஸ்டேடியம், அகமதாபாத்.

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஐபிஎல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL 2026-க்கு பிறகு குட்பை சொல்லும் 5 ஸ்டார் வீரர்கள்! அட! மிஸ்டரி ஸ்பின்னரும் இருக்காரா?
Recommended image2
Now Playing
வீட்டுக்கு போய் விசில் அடிங்க"... சேப்பாக்கத்தில் CSK ரசிகர்களை வம்பிழுத்த இஷான் கிஷன்! வீடியோ வைரல்
Recommended image3
Now Playing
CSK Playoffs 2026 | SRH-யிடம் தோல்வி... CSK-க்கு ப்ளேஆஃப் வாய்ப்பு இருக்கா? கணக்குகள் சொல்வதென்ன?
Related Stories
Recommended image1
Vaibhav Suryavanshi: ஐபிஎல் போட்டியில் புதிய சாதனை! மேக்ஸ்வெல் ரெக்கார்டு ஊதி தள்ளிய 15 வயதான இளம் வீரர் வைபவ்!
Recommended image2
Now Playing
ஐபிஎல் 2026 | சிங்க நடை போடும் விராட்.! சரித்திரம் படைத்த கோலி.! புதிய வரலாறு படைத்த ஆர்சிபி நாயகன்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved