MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IPL 2026 Prize Money: ஐபிஎல்லில் பரிசு மழை! சாம்பியன் அணிக்கு இத்தனை கோடிகளா? அடேங்கப்பா!

IPL 2026 Prize Money: ஐபிஎல்லில் பரிசு மழை! சாம்பியன் அணிக்கு இத்தனை கோடிகளா? அடேங்கப்பா!

IPL 2026 Prize Money: ஐபிஎல் 2026 பைனலில் ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ள நிலையில், ஐபிஎல் பரிசுத்தொகை என்ன? கோப்பை வெல்லும் அணிக்கு எவ்வளவு கிடைக்கும்? என்பது குறித்து பார்ப்போம்.

2 Min read
Author : Rayar r
Published : May 31 2026, 03:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
ஐபிஎல் 2026 பைனல்: ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ் மோதல்
Image Credit : ANI

ஐபிஎல் 2026 பைனல்: ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ் மோதல்

IPL 2026 இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகள் மோதுகின்றன. இன்று (மே 31) மாலை 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் எந்த அணி வென்றாலும், அது அவர்களின் இரண்டாவது ஐபிஎல் கோப்பையாக இருக்கும். ஏனெனில் RCB கடந்த ஆண்டு (2025) சாம்பியன் ஆனது. GT அணி 2022-ல் கோப்பையை வென்றது. அதுவும் ஆர்சிபிக்கு தொடர்ந்து 2வது முறையாக கோப்பை வெல்லும் வாய்ப்பு கனிந்துள்ளது.

ஐபிஎல் 2026 பரிசுத்தொகை

ஐபிஎல் 2026 இறுதிப் போட்டிக்குப் பிறகு வழங்கப்படும் பரிசுத்தொகை தான் இப்போது ஹாட் டாபிக் ஆக உள்ளது. இந்த ஆண்டு டாப் 4 இடங்களை பிடித்த அணிகளுக்கு மொத்தமாக சுமார் ரூ.46.5 கோடி பரிசுத்தொகை கிடைக்கவுள்ளது. அணிகளுக்கு மட்டுமல்ல, ஆரஞ்சு கேப், பர்பிள் கேப், 'மோஸ்ட் வேல்யூபிள் பிளேயர்' போன்ற தனிநபர் விருது வென்ற வீரர்களுக்கும் தலா ₹10 லட்சம் பரிசு வழங்கப்படும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
சாம்பியன் அணிக்கு எவ்வளவு பரிசு கிடைக்கும்?
Image Credit : ANI

சாம்பியன் அணிக்கு எவ்வளவு பரிசு கிடைக்கும்?

அதாவது ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு பிறகு பரிசு மழை பெய்ய உள்ளது. இன்று சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு கோப்பையுடன் ரூ.20 கோடி பரிசுத்தொகை கிடைக்கும். இறுதிப்போட்டியில் தோற்று ரன்னர்-அப் ஆகும் அணிக்கு ரூ.13 கோடி கிடைக்கும். குவாலிஃபையர்-2ல் தோற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிக்கு ரூ.7 கோடியும், எலிமினேட்டரில் தோற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிக்கு ரூ.6.5 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும். ஐபிஎல் 2026 பரிசுத்தொகை சுருக்கமாக: சாம்பியன் அணி: ரூ.20 கோடி; ரன்னர்-அப் அணி: ரூ.13 கோடி; குவாலிஃபையர்-2ல் தோற்ற அணி ராஜஸ்தான்: ரூ.7 கோடி; எலிமினேட்டரில் தோற்ற அணி (SRஹ்): ரூ.6.5 கோடி.

Related Articles

Related image1
IPL 2026 Final: கோப்பை யாருக்கு? RCB vs GT இறுதிப் போட்டி... அனல் பறக்கும் அகமதாபாத்!
Related image2
IPL 2026 Final RCB vs GT: ஆர்சிபி அணியில் களமிறங்கும் 'சிக்சர்' மன்னன்! மாஸ் பிளேயிங் லெவன் இதோ!
33
எந்தெந்த அணிகள் எத்தனை முறை கோப்பை வென்றுள்ளது?
Image Credit : ANI

எந்தெந்த அணிகள் எத்தனை முறை கோப்பை வென்றுள்ளது?

ஐபிஎல் வரலாற்றைப் பார்த்தால், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள்தான் மிகவும் வெற்றிகரமான அணிகளாக உள்ளன. இதுவரை எந்தெந்த அணி எத்தனை முறை கோப்பையை வென்றுள்ளது என்ற பட்டியல் குறித்து பார்ப்போம் 1. மும்பை இந்தியன்ஸ் - 5 முறை (2013, 2015, 2017, 2019, 2020) - கேப்டன்: ரோஹித் சர்மா 2. சென்னை சூப்பர் கிங்ஸ் - 5 முறை (2010, 2011, 2018, 2021, 2023) - கேப்டன்: மகேந்திர சிங் தோனி

3. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 3 முறை (2012, 2014, 2024) - கேப்டன்கள்: கௌதம் கம்பீர், ஷ்ரேயஸ் ஐயர் 4. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 1 முறை (2025) - கேப்டன்: ரஜத் படிதார் 5. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 1 முறை (2016) - கேப்டன்: டேவிட் வார்னர் 6. டெக்கான் சார்ஜர்ஸ் ஹைதராபாத் - 1 முறை (2009) - கேப்டன்: ஆடம் கில்கிறிஸ்ட் 7. ராஜஸ்தான் ராயல்ஸ் - 1 முறை (2008) - கேப்டன்: ஷேன் வார்ன் 8. குஜராத் டைட்டன்ஸ் - 1 முறை (2022) - கேப்டன்: ஹர்திக் பாண்ட்யா.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஐபிஎல்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
குஜராத் டைட்டன்ஸ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Kohli vs Gill: ஐபிஎல் ஃபைனல்.. விராட் கோலி, ஷுப்மன் கில் அடித்த ரன்கள் எவ்வளவு? இதோ முழு விவரம்!
Recommended image2
IPL 2026 Final: கோப்பை யாருக்கு? RCB vs GT இறுதிப் போட்டி... அனல் பறக்கும் அகமதாபாத்!
Recommended image3
Orange Cap Race: ஆரஞ்சு கேப் ரேஸ்: வைபவ் சாதனையை முறியடிப்பார்களா கில், சாய் சுதர்சன்?
Related Stories
Recommended image1
IPL 2026 Final: கோப்பை யாருக்கு? RCB vs GT இறுதிப் போட்டி... அனல் பறக்கும் அகமதாபாத்!
Recommended image2
IPL 2026 Final RCB vs GT: ஆர்சிபி அணியில் களமிறங்கும் 'சிக்சர்' மன்னன்! மாஸ் பிளேயிங் லெவன் இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved