MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IPL 2026: இ-சிகரெட் முதல் போன் வரை.. வீரர்களுக்கு பிசிசிஐ போட்ட செக்! இனி இதுக்கெல்லாம் தடா!

IPL 2026: இ-சிகரெட் முதல் போன் வரை.. வீரர்களுக்கு பிசிசிஐ போட்ட செக்! இனி இதுக்கெல்லாம் தடா!

IPL 2026: BCCI Issues Strict Code of Conduct: ஐபிஎல் தொடரின் ஒழுக்கத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் பிசிசிஐ 8 பக்கங்கள் கொண்ட புதிய நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.

2 Min read
Author : Rayar r
Published : May 08 2026, 08:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
ஐபிஎல் 2026 வீரர்களுக்கு பிசிசிஐ செக்
Image Credit : X

ஐபிஎல் 2026 வீரர்களுக்கு பிசிசிஐ செக்

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கோலாகலமாக நடந்து வரும் நிலையில், சில வீரர்கள் செய்த செயல் பிசிசிஐக்கு தலைகுனிவை ஏற்படுத்தியது. அதாவது பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிக்கு எதிரான போட்டியின்போது, ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியின் கேப்டன் ரியான் பராக், டிரெஸ்ஸிங் ரூமில் இ-சிகரெட் புகைத்ததற்காக, அவரது போட்டி சம்பளத்தில் 25% அபராதமாக விதிக்கப்பட்டது. மேலும், அவருக்கு ஒரு தகுதி இழப்புப் புள்ளியும் வழங்கப்பட்டது.

மற்றொரு சம்பவத்தில், ஏப்ரல் 10 அன்று பார்சபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின் போது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மேலாளர் ரவீந்தர் சிங் பிந்தர், டக்-அவுட் அருகே மொபைல் போன் பயன்படுத்தியதற்காக அவருக்கு ₹1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பஞ்சாப் கிங்ஸ் வீரர் யுஸ்வேந்திர சாஹலும் இ சிகரெட் பிடித்ததாக சர்ச்சை எழுந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
23
நெறிமுறைகள் வெளியீடு
Image Credit : ANI

நெறிமுறைகள் வெளியீடு

இந்த நிலையில், ஐபிஎல் தொடரின் ஒழுக்கத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) 8 பக்கங்கள் கொண்ட புதிய நெறிமுறைகளை (SOP) வெளியிட்டுள்ளது. வீரர்களின் அனுமதிக்கப்படாத நபர்கள் வீரர்களின் ஹோட்டல் அறைகளுக்குள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வீரர்கள் யாரையும் தங்கள் தனிப்பட்ட அறைக்கு அழைக்க முடியாது. யாரையாவது சந்திக்க வேண்டுமென்றால் ஹோட்டலின் பொதுவான வரவேற்பு அறையில் (Lobby) மட்டுமே சந்திக்க வேண்டும். இதற்கு மேலாளரிடம் எழுத்துப்பூர்வ அனுமதி பெற வேண்டியது கட்டாயம்.

வீரர்களோ அல்லது பயிற்சியாளர்களோ தனிப்பட்ட காரணங்களுக்காக ஹோட்டலை விட்டு வெளியே செல்ல வேண்டுமென்றால், பாதுகாப்பு அதிகாரியிடம் (SLO) முறையான அனுமதி பெற வேண்டும். இந்தியாவில் இ-சிகரெட் மற்றும் வேப் (Vape) பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். எனவே, டக்அவுட், டிரெஸ்ஸிங் ரூம், ஹோட்டல் மற்றும் பயிற்சி மைதானங்களில் புகைபிடிக்கவோ, வேப் பயன்படுத்தவோ முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. போட்டி நடக்கும் போது அணி உரிமையாளர்கள் டக்அவுட்டில் இருக்கும் வீரர்களுடன் பேசுவதற்கோ அல்லது அவர்களைக் கட்டிப்பிடித்து உற்சாகப்படுத்துவதற்கோ அனுமதி இல்லை என்றும் பிசிசிஐ கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

Related Articles

Related image1
IPL: ராஜஸ்தானை ஆளப்போகும் 'மிட்டல்' ராஜவம்சம்.. ரூ.15,000 கோடிக்கு மெகா டீல்!
Related image2
IPL ரசிகர்களுக்கு ஜியோவின் மெகா கிப்ட்.. JioHotstar சந்தாவுடன் அன்லிமிடெட் 5G டேட்டா.. முழு விவரம்!
33
பிசிசிஐ துணைத் தலைவர் சொல்வது என்ன?
Image Credit : ANI

பிசிசிஐ துணைத் தலைவர் சொல்வது என்ன?

இது தொடர்பாக பேசிய பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, "பிசிசிஐ சில புதிய விதிகளை கொண்டு வருகிறது. வீரர்களை யார் சந்திக்கலாம் என்பதில் இனி கட்டுப்பாடு இருக்கும். ஹோட்டல்களிலோ, டீம் பஸ்களிலோ அங்கீகரிக்கப்படாத நபர்கள் வீரர்களை சந்திக்க முடியாது. ஐபிஎல் தொடரின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை" என்று குறிப்பிட்டார்.

சுக்லாவின் இந்த கருத்து, பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்யாவின் அறிவிப்பைத் தொடர்ந்து வந்துள்ளது. நடப்பு ஐபிஎல் சீசனில் வீரர்கள், அணி அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத நபர்கள் சம்பந்தப்பட்ட பல "ஒழுங்கீனங்கள் மற்றும் முறைகேடுகள்" கண்டறியப்பட்டதால், அனைத்து ஐபிஎல் அணிகளுக்கும் கடுமையான அறிவுறுத்தல் வழங்கப்படும் என்று சைக்யா ஒரு நாள் முன்பு கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஐபிஎல்
விளையாட்டு

Latest Videos
Recommended Stories
Recommended image1
yuzvendra chahal: விமானத்தில் சாஹல் செய்த விபரீதம்: சிக்கிய வீடியோ... முடிவுக்கு வரும் கிரிக்கெட் வாழ்க்கை?
Recommended image2
Dhoni's Future: தோனி 2026 IPL-ல் விளையாடுவது கஷ்டம்; CSK சொதப்பினால் மட்டுமே வாய்ப்பு - அஷ்வின்
Recommended image3
DC vs CSK: சஞ்சு சாம்சன் மீண்டும் களத்தில்; சென்னை, டெல்லிக்கு இன்று வாழ்வா சாவா ஆட்டம்..!
Related Stories
Recommended image1
IPL: ராஜஸ்தானை ஆளப்போகும் 'மிட்டல்' ராஜவம்சம்.. ரூ.15,000 கோடிக்கு மெகா டீல்!
Recommended image2
IPL ரசிகர்களுக்கு ஜியோவின் மெகா கிப்ட்.. JioHotstar சந்தாவுடன் அன்லிமிடெட் 5G டேட்டா.. முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved