MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • Rohit Sharma Retirement: கம்பீர் சொன்ன 'அந்த' வார்த்தை! இங்கிலாந்து ஓடிஐ தொடருடன் ரோகித் சர்மா ஓய்வு?

Rohit Sharma Retirement: கம்பீர் சொன்ன 'அந்த' வார்த்தை! இங்கிலாந்து ஓடிஐ தொடருடன் ரோகித் சர்மா ஓய்வு?

Rohit Sharma Retirement: இந்திய அணியின் மூத்த வீரர் ரோகித் சர்மா இங்கிலாந்து ஓடிஐ தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கம்பீர் சொன்ன ஒரு விஷயத்தில் அவர் அதிருப்தி அடைந்ததாக தகவல்கல் கூறுகின்றன.

2 Min read
Author : Rayar A
Published : Jul 17 2026, 07:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
இந்தியா‍ இங்கிலாந்து ஓடிஐ தொடர்
Image Credit : Getty

இந்தியா‍-இங்கிலாந்து ஓடிஐ தொடர்

இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான ஓடிஐ தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், நேற்று நடந்த 2வது போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா நிர்ணயித்த 234 ரன்கள் இலக்கை அந்த அணி 44 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. இந்திய அணியில் விராட் கோலி (65), ஷ்ரேயாஸ் ஐயர் (66) அரைசதம் அடித்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா 47 பந்துகளில் 26 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
இங்கிலாந்து தொடருடன் ரோகித் சர்மா ஓய்வு?
Image Credit : X@BCCI

இங்கிலாந்து தொடருடன் ரோகித் சர்மா ஓய்வு?

இந்த நிலையில், லார்ட்ஸில் ஜூலை 19 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஓடிஐ போட்டியுடன் ஓடிஐ பார்மட்டிலும் ரோகித் சர்மா ஓய்வு பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தேசிய ஊடக அறிக்கைகளின்படி, இந்திய அணியின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு பிசிசிஐ தேர்வுக்குழு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. 

2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கு அணியை தயார்படுத்தும் நோக்கில், இங்கிலாந்து தொடருக்குப் பிறகு ரோகித் சர்மாவை ஒருநாள் அணிக்குத் தேர்வு செய்ய வேண்டாம் என அவர்கள் முடிவெடுத்துள்ளனர். இதுகுறித்து கடந்த வாரம் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் தேர்வாளர்கள் ரோகித்திடம் நீண்ட நேரம் பேசியுள்ளனர்.

Related Articles

Related image1
Virat Kohli: ‘கிங்’ கோலி அதிரடி... குமார் சங்கக்காராவின் பல ஆண்டுச் சாதனைக்கு முற்றுப்புள்ளி!
Related image2
Rohit Sharma: வயது வெறும் நம்பர்தான்! 39 வயதில் புதிய உலக சாதனை படைத்த ரோகித் சர்மா!
34
கம்பீர் சொன்ன வார்த்தையால் ரோகித் சர்மா அதிருப்தி
Image Credit : Getty

கம்பீர் சொன்ன வார்த்தையால் ரோகித் சர்மா அதிருப்தி

இளம் திறமைகளுக்கு வாய்ப்பு கொடுப்பதே தேர்வுக்குழுவின் இந்த முடிவுக்கு முக்கியக் காரணம். குறிப்பாக, யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற அதிரடி இளம் வீரர்களுக்கு தொடக்க வீரராக நிரந்தர வாய்ப்பு அளித்து, அடுத்த உலகக் கோப்பைக்கு ஒரு வலுவான அணியை உருவாக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளில் தொடர விரும்பினாலும், இந்த முடிவு அவருக்குக் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

44
ரோகித் சர்மாவின் பேட்டிங் பார்ம் மோசம்
Image Credit : X/ImRo45

ரோகித் சர்மாவின் பேட்டிங் பார்ம் மோசம்

ரோகித் சர்மா 2024 டி20 உலகக் கோப்பையை வென்றதுடன் அந்த ஃபார்மட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பிறகு, 2025 மே மாதம் இன்ஸ்டாகிராம் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்து ஆச்சரியப்படுத்தினார். ஏற்கெனவே ஒருநாள் கேப்டன் பதவியை சுப்மன் கில்லிடம் அவர் ஒப்படைத்துவிட்டார். இப்போது, கடைசியாக இருந்த ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்தும் அவர் வெளியேறும் நேரம் வந்துவிட்டது.

இங்கிலாந்து தொடரில் ரோகித் சர்மாவின் பேட்டிங் ஃபார்மும் தேர்வாளர்களின் இந்த முடிவுக்கு வலு சேர்த்துள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் அவர் முறையே 11 மற்றும் 26 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். களத்தில் பந்துகளை எதிர்கொள்ள அவர் திணறுவதும், வேகமாக ரன் குவிக்க முடியாததும், அவரது வயது மற்றும் வேகத்தை பாதித்துள்ளதா? என்ற விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடைசி போட்டிக்காக காத்திருக்கும் ரசிகர்கள்

மொத்தத்தில், லார்ட்ஸில் நடக்கவிருக்கும் இந்தப் போட்டி, இந்திய கிரிக்கெட்டின் ஒரு அழகான சகாப்தத்தின் முடிவாக அமையலாம். கேப்டனாக இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த ரோகித், தனது பேட் மூலம் பிரியாவிடை தருவதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ரோகித் சர்மா
இந்திய கிரிக்கெட் அணி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Virat Kohli: ‘கிங்’ கோலி அதிரடி... குமார் சங்கக்காராவின் பல ஆண்டுச் சாதனைக்கு முற்றுப்புள்ளி!
Recommended image2
Top 10 Indian Batsmen: இங்கிலாந்து மண்ணில் அதிக ரன் குவித்த டாப் 10 இந்திய வீரர்கள்! டிராவிட்டின் இமாலய சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி?
Recommended image3
CSK New Coach: சிஎஸ்கே-வுக்கு புதிய கோச் ராகுல் டிராவிட்டா? 3 வருஷமா ப்ளே ஆஃப் போகாததுதான் காரணமா?
Related Stories
Recommended image1
Virat Kohli: ‘கிங்’ கோலி அதிரடி... குமார் சங்கக்காராவின் பல ஆண்டுச் சாதனைக்கு முற்றுப்புள்ளி!
Recommended image2
Rohit Sharma: வயது வெறும் நம்பர்தான்! 39 வயதில் புதிய உலக சாதனை படைத்த ரோகித் சர்மா!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved