MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • IPL: ராஜஸ்தானை ஆளப்போகும் 'மிட்டல்' ராஜவம்சம்.. ரூ.15,000 கோடிக்கு மெகா டீல்!

IPL: ராஜஸ்தானை ஆளப்போகும் 'மிட்டல்' ராஜவம்சம்.. ரூ.15,000 கோடிக்கு மெகா டீல்!

RR Takeover Mittal Family & Adar Poonawalla: லட்சுமி மிட்டல் மற்றும் ஆதித்ய மிட்டல் தலைமையிலான மிட்டல் குடும்பம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ரூ.15,660 கோடிக்கு வாங்கியுள்ளது. 

2 Min read
Author : Rayar A
Published : May 03 2026, 06:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
ராஜஸ்தான் அணி விற்பனை
Image Credit : AI

ராஜஸ்தான் அணி விற்பனை

ஐபிஎல் அணிகளின் உரிமையாளர் கட்டமைப்பில் மீண்டும் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. கடந்த மார்ச் மாதம், ஆதித்யா பிர்லா தலைமையிலான ஒரு குழுமம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 1.78 பில்லியன் டாலருக்கு வாங்கிய சில மாதங்களிலேயே, இப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கைமாறியுள்ளது. அதாவது லட்சுமி மிட்டல் மற்றும் ஆதித்ய மிட்டல் தலைமையிலான மிட்டல் குடும்பம், இந்த அணியை வாங்குவதற்கான இறுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 1.65 பில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.15,660 கோடி ஆகும்.

மிட்டல் குடும்பம் + ஆதார் பூனாவாலா

சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் சிஇஓ ஆதார் பூனாவாலாவுடன் இணைந்து இந்த மெகா டீல் நடந்துள்ளது. இந்த குழுமம், மனோஜ் படாலே மற்றும் அவரது சக முதலீட்டாளர்களிடமிருந்து அணியை வாங்கியுள்ளது. இந்த மதிப்பில், ஐபிஎல் அணி மட்டுமல்லாமல், தென்னாப்பிரிக்காவின் 'பார்ல் ராயல்ஸ்' மற்றும் கரீபியன் பிரீமியர் லீக்கில் உள்ள 'பார்படாஸ் ராயல்ஸ்' ஆகிய ராயல்ஸ் குழுமத்தின் உலகளாவிய அணிகளும் அடங்கும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
அதிக பங்கு யார் வசம் இருக்கும்?
Image Credit : Getty

அதிக பங்கு யார் வசம் இருக்கும்?

2026-ஆம் ஆண்டின் இறுதியில் இந்த கைமாற்றம் முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்பந்தம் முடிந்த பிறகு, மிட்டல் குடும்பத்திடம் அணியின் 75% பங்குகளும், பூனாவாலாவிடம் சுமார் 18% பங்குகளும் இருக்கும். மீதமுள்ள 7% பங்குகள், மனோஜ் படாலே உள்ளிட்ட தற்போதைய முதலீட்டாளர்களிடமே இருக்கும். இந்த ஒப்பந்தம், பிசிசிஐ (BCCI), சிசிஐ (CCI) மற்றும் ஐபிஎல் நிர்வாகக் குழுவின் ஒப்புதல்களுக்குப் பிறகே முழுமையடையும். 2008-ல் ஐபிஎல் தொடங்கியதிலிருந்து ராயல்ஸ் அணியின் முக்கிய முகமாக இருந்த மனோஜ் படாலே, அணியின் நிர்வாகக் குழுவில் தொடர்ந்து நீடிப்பார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் சூப்பர் சீசன்

நடப்பு ஐபிஎல் சீசனில், 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷியின் சிறப்பான ஆட்டத்தால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ப்ளேஆஃப் சுற்றுக்கான போட்டியில் நல்ல நிலையில் உள்ளது. 10 அணிகள் கொண்ட புள்ளிப்பட்டியலில் தற்போது 12 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் உள்ள 'பஞ்சாப் கிங்ஸ்' அணியை விட ஒரு புள்ளி மட்டுமே குறைவாக உள்ளது.

33
மிட்டலின் சொந்த ஊர் பாசம்
Image Credit : instagram

மிட்டலின் சொந்த ஊர் பாசம்

வடக்கு ராஜஸ்தானில் உள்ள சாதுல்பூர் கிராமத்தில் பிறந்த லட்சுமி மிட்டலுக்கு, இந்த ஒப்பந்தம் தனிப்பட்ட முறையிலும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதுபற்றி அவர் கூறும்போது, "எனக்கு கிரிக்கெட் மீது அதிக பிரியம் உண்டு. என் குடும்பத்தின் பூர்வீகம் ராஜஸ்தான். அதனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைத் தவிர வேறு எந்த ஐபிஎல் அணியின் ஒரு பகுதியாக இருக்க நான் விரும்பியதில்லை. 

நான் மாணவனாக இருந்தபோதே கிரிக்கெட் விளையாடத் தொடங்கினேன், அன்று முதல் இந்த விளையாட்டின் தீவிர ரசிகன். பல வீரர்கள் ராஜஸ்தான் ராயல்ஸ் ஜெர்சியை அணிந்து விளையாடியுள்ளனர். அவர்கள் இளம் திறமையாளர்களுக்கு உத்வேகமாக இருக்கிறார்கள். இந்த சிறந்த அணியின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ரசிகர்களுடன் சேர்ந்து மைதானத்தில் நமது வெற்றிகளைக் கொண்டாட ஆவலுடன் காத்திருக்கிறேன்," என்றார்.

ஆதித்யா மிட்டல் சொல்வது என்ன?

மேலும் ஆதித்யா மிட்டல் கூறுகையில், ''மிகக் குறுகிய காலத்தில் ஐபிஎல் உலகின் மிகப்பெரிய விளையாட்டு லீக்குகளில் ஒன்றாக மாறியுள்ளது; ராஜஸ்தான் ராயல்ஸ் இந்த லீக்கின் பழமையான மற்றும் மிக முக்கியமான அணிகளில் ஒன்றாகும். தனிப்பட்ட முறையில், இந்த சிறந்த அணியின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் பெருமையும் உற்சாகமும் அடைகிறேன். 

இளம் திறமைகளை வளர்ப்பதில் 'ராயல்ஸ்' அணிக்கு நல்ல பெயர் உள்ளது. அந்த பாரம்பரியம் தொடரும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். ராஜஸ்தான் ராயல்ஸை ஒரு உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு நிறுவனமாக மாற்ற உதவிய வீரர்கள், பயிற்சியாளர்கள், தலைமை மற்றும் மிக முக்கியமாக ரசிகர்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இந்த அணியின் பாரம்பரியத்தை நாங்கள் தொடர்வோம், அதை மேலும் வளப்படுத்துவோம்'' என்றார்.

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஐபிஎல்
ராஜஸ்தான் ராயல்ஸ்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs WI 5th T20: பெங்களூருவில் கொட்டித் தீர்த்த மழை.. இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் தொடர் 2-2 என சமன்!
Recommended image2
டாஸ் வென்றும் இந்தியாவுக்கு பேரிடி! ஹோப்பின் சதம், சாம்சனின் போராட்டம்... தோல்விக்கான 3 காரணங்கள்!
Recommended image3
Now Playing
ஹைதராபாத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் திலக் வர்மா செய்தியாளர்கள் சந்திப்பு!
Related Stories
Recommended image1
Vaibhav Suryavanshi: RR தோல்வியால் மைதானத்தில் கதறி அழுத வைபவ் சூர்யவன்ஷி.. வைரலாகும் வீடியோ!
Recommended image2
ரூ.100 கொடுத்தால் தான் செல்ஃபி.. சிறுவர்களிடம் கண்டிஷன் போட்ட வைபவ் சூர்யவன்ஷி: கடைசியில் ட்விஸ்ட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved