- Home
- Sports
- Sports Cricket
- Vaibhav Suryavanshi: RR தோல்வியால் மைதானத்தில் கதறி அழுத வைபவ் சூர்யவன்ஷி.. வைரலாகும் வீடியோ!
Vaibhav Suryavanshi: RR தோல்வியால் மைதானத்தில் கதறி அழுத வைபவ் சூர்யவன்ஷி.. வைரலாகும் வீடியோ!
IPL 2026: ஐபிஎல் 2026 தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் தோல்வியுற்றதால் இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி கதறி அழுத வீடியோ வைரலாகி வருகிறது.

கொல்கத்தா முதல் வெற்றி
ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான பரபரப்பான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தங்களது முதல் வெற்றி பெற்றது. இதனால் கொல்கத்தா ரசிகர்கள் வெற்றியை கொண்டாடிய நிலையில், கிரிக்கெட் உலகின் கண்கள் வேறு ஒரு காட்சியில் கலங்கின. அதாவது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது தொடக்க ஆட்டக்காரர் இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி, தோல்விக்குப் பிறகு மைதானத்தில் உடைந்து அமர்ந்திருந்த காட்சிகள் ரசிகர்களின் இதயத்தை நொறுக்கியது.
தேம்பி தேம்பி அழுத வைபவ் சூர்யவன்ஷி
இந்த போட்டி முடிந்த பிறகு, பவுண்டரி லைன் அருகே தனியாக அமர்ந்து அவர் அழுதுகொண்டிருந்ததை கேமராக்கள் படம் பிடித்தன. இந்த தொடரில் ராஜஸ்தான் அணிக்கு இது இரண்டாவது தோல்வி மட்டுமே. ஆனாலும், வைபவ்வால் தனது சோகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. வைபவ்வின் சோகத்தைக் கண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சப்போர்ட் ஸ்டாஃப் ஒருவர், அவரிடம் சென்று ஆறுதல் கூறும் வீடியோ, புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
Vaibhav Suryavanshi broke down in tears after RR’s loss to KKR
The young opener sat on the ground, overwhelmed with emotion after the match
Teammates consoled him as the moment touched fans pic.twitter.com/Qxn81f6hVi— Telangana Ahead (@telanganaahead) April 20, 2026
கொல்கத்தா த்ரில் வெற்றி
முன்னதாக நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில், அனுகுல் ராய் மற்றும் அரைசதம் அடித்த ரிங்கு சிங் ஆகியோரின் அபாரமான 76 ரன்கள் பார்ட்னர்ஷிப்பால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி இந்த சீசனின் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி KKR த்ரில் வெற்றி பெற்றது.
வைபவ் சூர்யவன்ஷி அதிரடி
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. வருண் சக்கரவர்த்தி மற்றும் கார்த்திக் தியாகி ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். சுனில் நரைன் 2 விக்கெட் சாய்த்தார். பேட்டிங் செய்வதற்கு கடினமான பிட்ச்சில், கொல்கத்தா பந்துவீச்சாளர்களை வைபவ் சூயர்வன்ஷி சற்றும் பயமின்றி எதிர்கொண்டு 28 பந்துகளில் 46 ரன்கள் குவித்தார். பின்பு விளையாடிய கொல்கத்தா அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
அட்டகாசமாக விளையாடிய ரிங்கு சிங் 34 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 53 ரன்கள் அடித்தார். வருண் சக்கரவர்த்தி மேட்ச் வின்னராக ஜொலித்தார். இந்த வெற்றியின் மூலம், KKR அணி ஒரு வெற்றி, ஐந்து தோல்விகள் மற்றும் ஒரு முடிவு எட்டப்படாத போட்டியுடன் மூன்று புள்ளிகளைப் பெற்று, புள்ளிப் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. RR அணி நான்காவது இடத்தில் நீடிக்கிறது.

